Advertisement

பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடில்லி: சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்தது செல்லாது என்று போலீஸ் அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் பொன்.மாணிக்கவேல். சில மாதங்கள் முன்பு தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலை அதே பணியில் தொடர உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, போலீஸ் அதிகாரிகள் 66 பேர் உச்சநீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், அதிரடியாக அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • சௌக்கிதார் அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    நேர்மைக்கு எதிராக என்னவெல்லாம் செய்கிறார்கள்...??? எப்படியும் இறுதியில் தர்மமே ஜெயிக்கும்...

  • சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா

    அந்த அறுபத்திஆறு பேரையும் நொங்கி எடுத்தா பல உண்மைகள் வெளிவரும்.. அவுங்களே கொத்தா மாட்டிக்கிட்டாங்க

  • சௌக்கிதார் வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

    ஏன்பா அந்த 66 பெயர் லிஸ்ட் போட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்.... எந்த ஊருக்காரான்னு மக்களும் தெரிஞ்சுக்குவோம்ல....

  • Darmavan - Chennai,இந்தியா

    இதை விடாமல் தொடர்ந்து நிஜமான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

  • Girija - Chennai,இந்தியா

    Mr.Pon.Mannikavel should be given extension of service as uniformed officer with same powers only will bring out all crimes committed in HRE. There is no point in keeping him just as investigator without powers .

Advertisement