Advertisement

நாமக்கல்: குழந்தைகள் விற்பனை விசாரிக்க 12 குழு

நாமக்கல் : ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக விசாரிக்க மொத்தம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதா என்பவர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பேரில் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடந்து வருகிறது.

இதில், ராசிபுரம் நகராட்சியில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் தரப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க, டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தலா 5 பேர் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கொல்லிமலையில் தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தைகளின் ஆவணங்களை பரிசோதிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழந்தை கடத்தலில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement