Advertisement

ஆட்சிக்கு ஆதரவான அலை: மோடி

வாரணாசி : நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். வாரணாசியில் தொகுதியில் இன்று (ஏப்.26) வேட்புமனு தாக்கல் செய்யும் முன் கட்சி தொண்டர்களிடையே மோடி பேசினார்.
அப்போது அவர், முதல் முறையாக நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. காஷ்மீர் முதல் குமரி வரை, காசி காட் முதல் போர்பந்தர் வரை நாடு முழுவதிலும் உள்ள மக்கள், "மோடி ஆட்சி, மீண்டும் வேண்டும்" என்கிறார்கள். நல்லாட்சிக்காக நேர்மையுடன் கடினமாக உழைத்துள்ளோம். நான் வெற்றி பெறுகிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. ஜனநாயகம் வெல்ல வேண்டும். வெயில் சுட்டெரிக்கும் மே மாதத்தில், அனைத்தையும் உடைத்தெறிந்து ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைத்து உலகிற்கு காட்டுவோம்.


முந்தைய தேர்தல்களின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்போம். ஒவ்வொரு 100 ஆண்களின் ஓட்டுக்கு இணையாக 105 பெண்கள் ஓட்டளிக்க வேண்டும். மக்கள் தங்கள் மனங்களில் முடிவு செய்து விட்டார்கள் மோடி ஆட்சி மீண்டும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். வாரணாசியில் ஏற்கனவே வென்று விட்டோம். அதற்கு நேற்று நடந்த பேரணியே சான்று. இனி நடக்க வேண்டியது ஒன்றுமில்லை. வாரணாசி நேற்றே எனக்கு தனது ஆசியை தந்து விட்டது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அது அள்ளிட்டு போற அலை.. பாஜக என்ற குப்பையை மேலே வைத்த அலை போனமுறை இருந்தது. மக்கள் அந்த தவறை நன்றாக உணர்ந்து விட்டார்கள்.

 • Velu -

  baba Ram raheem Asharam Modi ji....

 • Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ

  கரை ரொம்ப நல்லது ஆனா நுரை தள்ளினா danger தான் பார்த்து

 • Snake Babu - Salem,இந்தியா

  ஒண்ணு மட்டும் நிச்சயம், போன தேர்தல் போல இப்ப கிடையாது, போன தடவை ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பினார் . ஆகையால் மோடி வெற்றி, அதிலும், பிஜேபி தேர்தல் அறிக்கை வேறு நிறைய ஜிகினா வேலையோடு இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் தேர்தல் மக்களுக்கு முன்பு போல பிஜேபி ஆதரவு கிடையாது. அதேநேரத்தில் காங் ஆதரவும் கிடையாது. ஆனால் பிஜேபியின் ஆட்டம் அதனுடைய வெற்றியை பாதிக்கும் இன்றுவரை இவர்கள் செய்த சாதனைகள் என்ன, இனி என்ன செய்ய போகிறார்கள் என்று பேசுவதே இல்லை. இது ஆணவத்தின் உச்சம் , அடுத்தவரை குறைகூறினாலே வெற்றி பெற்றுவிடலாம் என்று இருந்தது போன தேர்தல் இப்போது அப்படி இல்லை, ஆனால் ஒன்று எதிர்க்கட்சி முன்னேறுகிறது என்று சொன்னால் கண்டிப்பாக அது பிஜேபியின் அலட்சியத்தால், ஆணவப்போக்கால் தான், காங் என்று ஒன்று இல்லாமால் போக வேண்டியது. அதற்கு உயிர்கொடுத்து தற்போது கணிசமாக நல்ல நிலைக்கு வரும் படி செய்த பெருமை பிஜேபியை சாரும். சதவீதத்தை பார்க்கும் பொது மக்களின் சலிப்பு நன்றாகவே தெரிகிறது அரசியல்வாதிகள் மக்களை மடையர் ஆக்குகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது இதில் பிஜேபி வெகு சமர்த்து. ஒரு ஆளும்கட்சியா இருந்து கொண்டு இன்னும் காங் குறைகூறிக் கொண்டு வாக்கு கேட்பது பிஜேபியின் இயலாமையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. நல்ல தலைவன் இல்லாதது நாட்டுக்கு கேடு. மோடி அதுக்கு தகுதி ஆனவர் இல்லை என்பது போனஆட்சி சாட்சி...……500 1000 செல்லாததக்கியது GST போன்றவை தொலைவு அடைந்த திட்டங்கள், வேலை இல்லை திண்டாட்டம் விலைவாசி உயர்வு தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது .மற்றபடி பக்தாஸ் அலம்பல் தாங்கமுடியவில்லை பிஜேபியின் அதன் பக்தாஸ்தான் காங் வளர்ச்சிக்கு முழு காரணம். நன்றி வாழ்க வளமுடன்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  புலம்புகிறவர்கள் மே 22 வரை புலம்பி கொள்ளலாம் ,மீண்டும் மோடிதான் பதவி ஏற்க போகிறார் அதில் எந்த மாற்றமும் இல்லை.

Advertisement