Advertisement

24 மணி நேரத்தில் புயலாக மாறும்

புதுடில்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை மையம் இன்று (ஏப்.,26) காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும். புயல் இலங்கை கடல் வழியாக வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நெருங்கும். காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ., வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் நாகையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகையில் 10 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 700 க்கும் மேற்பட்ட விசபை்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • partha - chennai,இந்தியா

    புயல் பகவான் சென்னைக்கு அருள் செய்தால் தான் நிவாரணம், இப்பொழுதே மக்கள் தெரு தெருவாக தண்ணிக்கு அலைகிறார்கள் பாவம்

  • sundara - tirunelveli,இந்தியா

    அனேகமாக புயல் சென்னைக்கு மிக அருகில்தான் கரையை கடக்கும்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    வட தமிழகத்தை நெருங்கியதும் கடலை ஒட்டியே ஆந்திர, ஒடிசா, மேற்கு வங்கம் கடந்து மியான்மர் சேரும் போல தெரிகிறது . சென்னை க்கு எவ்வளவு அருகில் கிடைக்குமோ அதை பொறுத்தே மழை அளவு இருக்கும். ஒரு வேளை தூரம் அதிகரித்து விட்டால், வெயில் நம்மை வறுத்து எடுத்துவிடும். அதனால் மிக அருகிலேயே கடக்கவேண்டும் என்று வேண்டுவோம்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    SIVAM - baghram,ஆப்கானிஸ்தான். Now our meterological department's predictions are almost near normal and correct.

  • padma rajan -

    வருண பகவானே வருக புயல் இல்லாத மழை பெய்க. சென்னையில் உள்ள ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிக. தமிழக மக்கள் குறிப்பாக சென்னைவாசிகள் உன்னுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த முறையும் ஏமாற்றமில்லாமல் மழை பெய்து எங்களை தண்ணீர் கஷ்டத்திலிருந்து காப்பாற்றுவாயாக.

Advertisement