Advertisement

பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

வாரணாசி: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று(ஏப்.,26) காலை 11.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, 3.71 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி, இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக வாரணாசி சென்றுள்ள அவர், நேற்று நடந்த பிரமாண்ட பேரணியிலும் கலந்து கொண்டார். திறந்த வாகனத்தில் சென்ற அவரை, ஆதரவாளர்களும், பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்றனர்.


இந்நிலையில் வாரணாசியில் இன்று காலை 11.30 மணியிளவில், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • yaaro - chennai,இந்தியா

    மோடி எதிரிகள் நிறைய பர்னால் வாங்கி ஸ்டாக் செய்து கொள்ளவும். இன்னும் ஐந்து வருடங்கள் ...பத்து வருடங்கள் தேவைப்படும்

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    அடுத்த ஐந்தாண்டுகள் நன்றே துவங்கட்டும். தேசியமும் தெய்வீகமும் தழைக்கட்டும். ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறட்டும். அகண்ட பாரதம் மீளட்டும். வெற்றிவேல் ..... வீரவேல் ...... கந்தனுக்கு அரோஹரா

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    இந்தியாவின் நம்பிக்கை நாயகன் மீண்டும் அமோக வெற்றி பெறுவது உறுதி , இந்தியா விரைவில் வல்லரசு ஆக போவதும் உறுதி.

  • karthik - coimbatore,இந்தியா

  • Amreen - Utah,யூ.எஸ்.ஏ

    இந்தியாவின் பாதுகாப்புக்கு வலிமையான பிரதமர் தேவை. இலங்கையில் நடந்தது நமக்கெல்லாம் ஒரு பெரிய படிப்பினை. இந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு ஓரளவு வலிமை படுத்த பட்டுள்ளது. மாநில கட்சிகளிடம் ஆட்சி வந்தால் தங்கள் பினாமி சொத்துக்களை காப்பாற்றவும் அவர்களுக்குள் சண்டை போட்டு பணத்தை பிரிக்கவும் நேரம் சரியாக இருக்கும் அப்புறம் எங்க நாட்டு பாதுகாப்பு. இலங்கையை போல் நம் நாட்டிலும் நடக்கும். இதை நம் புரிந்து கொண்டால் சரி. வந்தே மாதரம்

Advertisement