Advertisement

மழையின்றி கருகிய பருத்தி செடிகளால் இழப்பு

மதுரை : மதுரை மாவட்டத்தில் மழையின்றி மானாவாரியாக பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி விட்டன. விவசாயிகள் நலன் கருதி உரிய நஷ்ட ஈடு வழங்க வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்மாவட்டத்தில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியாக பருத்தி, எள், துவரை, உளுந்து, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் பெருமளவு விளைவிக்கப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை பெய்ததால் மானாவாரி சாகுபடி விளைச்சல் எதிர்பார்த்த விளைச்சலை கண்டது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கோடை மழையை நம்பி தானியங்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அல்லிக்குண்டம் விவசாயி சின்னப்பாண்டி கூறியதாவது: ஒரு ஏக்கரில் மானாவாரியாக பருத்தி பயிரிட்டேன். 90வது நாளில் நன்கு வளர்ந்த பருத்தி காய்களை பறிக்கலாம். துவக்கத்தில் காய்களில் பால் பிடித்து நன்கு வளர்ந்தது. 60 நாளில் மழையின்றி கடும் வறட்சியால் செடிகள் கருகி விட்டன. இதனால் பாதி விளைந்த காய்களுடன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டோம். விவசாயிகள் நலன் கருதி உரிய நஷ்டஈடு வழங்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • J.Isaac - bangalore,இந்தியா

    அதற்குத்தான் பசுமை சாலை திட்டங்கள் .

  • ஆப்பு -

    தோ...வந்துக்கிட்டே இருக்கு...கோதாவரி தண்ணீர். இண்ணிக்கோ, நாளைக்கோ வந்துரும்னு பேசிக்கிறாங்க.

Advertisement