Advertisement

மண்ணரை குளத்தில் ஆகாயத்தாமரை: அகற்ற இயற்கை ஆர்வலர் 'ஐடியா'

திருப்பூர்:கோடை வெயிலை பயன்படுத்தி, மண்ணரை குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.நொய்யல் தண்ணீரை சேமித்து, ஆண்டு முழுவதும் இறவை பாசனம் செய்யும் வகையில், கொங்கு சோழர் காலத்தில், குளம், குட்டைகள் அமைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட எல்லையில், நொய்யலின் இருபுறமும், எட்டு குளங்கள் உள்ளன. அவற்றில், அணைப்பாளையம் குளம் தவிர, அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது.
தொழில்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ பொதுநல அமைப்பினரின் முயற்சியால், குளம், குட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. கொளுத்தும் கோடை வெயில் நேரத்திலும், பள்ளபாளையம், சாமளாபுரம், ஆண்டிபாளையம், மாணிக்காபுரம் குளங்களில் தண்ணீர் அலைமோதி கொண்டிருக்கிறது.மண்ணரை குளத்தில் மட்டும், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு காரணமாக, குளம் தனது பொலிவை இழந்து நிற்கிறது. அணைக்காடு அணையில் தேங்கும் ஆகாய தாமரை, குளத்துக்கு சென்று, ஆக்கிரமித்துள்ளது.
தற்போது கடும் வெயில் காரணமாக, ஆகாயத் தாமரை செடிகள் கருகியுள்ளன. குளத்தில் தண்ணீர் இருப்பதும் தெரியவில்லை. மண்ணரை குளத்தை மீண்டும் பொலிவாக்கும் வகையில், கோடை வெயிலை பயன்படுத்தி, ஆகாயத்தாமரையை அகற்ற, இயற்கை ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.ஆகாயத்தாமரையை அகற்றிவிட்டு, அணைக்காட்டில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்காலிலேயே, ஆகாய தாமரையை அகற்றவும், போதிய வசதிகளை செய்ய வேண்டும். இனியும் தாமதப்படுத்தாமல், குளத்தில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரையை அகற்ற, இயற்கை ஆர்வலர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement