Advertisement

சுங்கச்சாவடியில் ரகளை இருதரப்பில் 5 பேர் கைது

சோழவரம்:சுங்கச்சாவடியில்,வேன் ஓட்டுனர்களை தாக்கியவர்கள் மற்றும் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியவர்கள் என, 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஐந்து பேரை கைது செய்தனர்.
சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த, நல்லுார் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், கட்டண உயர்வு தொடர்பாக, நேற்று முன்தினம், வேன் ஓட்டுனர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், புழல், காவாங்கரை பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுனர்கள், பன்னீர்செல்வம்,ஜேம்ஸ் ஆகியோரை,சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கினர்.ஆத்திரமடைந்த சக வேன் ஓட்டுனர்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக, வேன் ஓட்டுனர் பன்னீர்செல்வம் மற்றும் சுங்கச்சாவடி மேலாளர், ராமஜோசுலு ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில்,சோழவரம் போலீசார், இரு தரப்பிலும், 14 பேர் மீது வழக்கு பதிந்தனர்.வேன் ஓட்டுனர்களை தாக்கியதாக, சுங்கச்சாவடி ஊழியர்கள்,ராஜேஷ் சேவ், 21, சமீர் கோஷ் வகோஷ், 28, மற்றும், சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக, வேன் ஓட்டுனர்கள் சலீம், 36, பாபு, 24, இளையராஜா, 25 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.சுங்கச்சாவடி ஊழியர்கள், மூன்று பேர், வேன் ஓட்டுனர்கள், ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement