Advertisement

புனரமைப்பு!  ரூ.1 கோடி செலவில் கிண்டி பூங்கா.... பார்வையாளர்களை கவர சிறப்பு திட்டம்

சென்னை:கிண்டி, சிறுவர் பூங்கா, பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்க, 1 கோடி ரூபாயில், புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. வன உயிரினங்களுக்கும், கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கிண்டி சிறுவர் பூங்கா, சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு, 46 வகையில், 400 வன உயிரினங்கள் உள்ளன. இங்கு, சாதாரண நாட்களிலேயே, ஆயிரக்கணக்கானோர் வருகை தருவர். விடுமுறை நாட்கள் என்றால், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.ஒதுக்கீடுசென்னையில், 2016ல் பல்லாயிரக்கணக்கான மரங்களை சாய்த்த, 'வர்தா' புயல், கிண்டி சிறுவர் பூங்காவையும் ஒரு கை பார்த்ததில், நுாற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.மரங்கள் சாய்ந்து விழுந்ததில், கட்டமைப்புகளும் முழுவதுமாக சேதமடைந்தன.முழுவதுமாக சாயாமல் நின்ற மரங்கள், நிமிர்த்தி நடப்பட்டன. வேரோடு சாய்ந்த மரங்களுக்கு பதில், மாற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.சுற்றுலா பயணியரின் வருகையை கருத்தில் கொண்டு, சேதமடைந்த கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டன. கூடுதல் கட்டமைப்புகளும் செய்ய வேண்டி இருந்தது. ஆக, பூங்காவை புதுப்பொலிவுடன் அமைக்க, கடந்தாண்டு, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதில், வெயிலில் வன உயிரினங்கள் சோர்வடைவதை தடுக்க, கூண்டு களின் அகலம் மற்றும் உயரம் அதிகரிக்கப்பட்டன. கூண்டில் குளிர்ச்சி ஏற்படுத்த, பனை மற்றும் தென்னை ஓலையால், மேற்கூரைகள் அமைக்கப்படுகின்றன.
கோடை வெப்பத்தால் உருவாகும் நோய்களில் இருந்து, மயில்கள், குரங்குகள், நெருப்பு கோழி உள்ளிட்ட உயிரினங்களை காக்க அவற்றின் மீது, தண்ணீர் பீய்ச்சி அடிக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.பழ வகைகள்அதேபோல், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, கால்நடை மருத்துவர் ஆலோசனைபடி, குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய, 40 வகையான காய்கறி, பழ வகைகளை கொடுக்கின்றனர்.பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று, வன உயிரினங்களை பார்க்கவும், கூண்டை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.அதேபோல், சேதம்அடைந்த சாலைகள், தார் மற்றும் சிமென்ட் கலவையால் சீரமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் கவுன்டர் விரிவாக்கப் பணி உள்ளிட்டவை முடிவடைந்துள்ளன.பிரதான சாலை மற்றும் உள் பகுதியில், இரண்டு வளைவுகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம் மற்றும் படர்ந்த செடி வடிவில், வளைவுகள் அலங்கரிக்கப்படும் பணி நடந்து வருகிறது.
மேலும், பிரதான சாலையில் இருந்து, உள்ளே செல்லும் பக்கவாட்டு சுவரில், வன உயிரின ஓவியங்கள், கண்ணை கவரும் வகையில் வரையப்படுகிறது.பல்வேறு வசதிகள்இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வன உயிரினங்களுக்கு நல்ல சூழல் ஏற்படுத்தும் வகையில், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சாலை, இருக்கை, டிக்கெட் கவுன்டர், குடிநீர் வசதி, முதலுதவி சிகிச்சை, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி, அவர்கள் தடையின்றி செல்ல சிறப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. சிறுவர்களை, கவரும் வகையில், புதிய வன உயிரினங்கள் வளர்க்க திட்டமிட்டுள்ளோம். அலங்கார வளைவுகளை தவிர, இதர பணிகள் முடிவடைந்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    . நாலே வருஷத்துல பூங்கா வந்து, இப்போ புனரமைப்பும் ஆகுது.

Advertisement