Advertisement

சூடுபிடித்தது பட்டு சேலை வியாபாரம்

தேர்தல் வாகன சோதனை முடிந்தது
காஞ்சிபுரம்:தேர்தல் முடிந்து, வாகன சோதனை விலக்கி கொள்ளப்பட்டதால், வெளியூர் வாடிக்கையாளர்கள், காஞ்சிபுரத்திற்கு அதிகளவில் வருவதால், பட்டு சேலை வியாபாரம், மீண்டும் சூடுபிடித்துள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு, மார்ச், 10ல் அறிவிக்கப்பட்டது. அன்று முதலே, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனை நடைபெற துவங்கியது. வாகன சோதனையின்போது, கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதனால், காஞ்சிபுரத்திற்கு பட்டு சேலை வாங்க வரும் வெளியூர் பயணியரை, அதிகாரிகள் சோதனை செய்யும்போது, பட்டு சேலை வாங்க வந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டியிருந்தது.ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வாகன சோதனை காரணமாக காஞ்சிபுரம் வருவதை தவிர்த்தனர். இதனால், வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.சில வாடிக்கையாளர்கள், வங்கி பரிவர்த்தனை மூலம், பட்டு சேலை வாங்கி சென்றனர். இருப்பினும், ஒரு மாதத்திற்கும் மேலாக, பட்டு சேலை வியாபாரம் குறைந்திருந்தது.
இந்நிலையில், கடந்த, 18ல், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து, வாகன சோதனை விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், வெளியூர் வாடிக்கையாளர்கள் மீண்டும் காஞ்சிபுரம் வந்து பட்டு சேலை வாங்க துவங்கியுள்ளனர்.முன்பிருந்த பட்டு சேலை வியாபாரம், தற்போது சூடு பிடித்து வருவதாக, கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கூட்டுறவு சங்கங்களிலும், முன்பிருந்த வியாபாரம் துவங்கியிருப்பதாக, சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement