Advertisement

தங்கம் எடுத்து வந்ததில் தவறுகள்: ஆந்திர தலைமை செயலர் ஒப்புதல்

திருப்பதி: ''சென்னை, பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து, திருமலைக்கு, தங்கக்கட்டிகள் கொண்டு வந்த விஷயத்தில், தவறுகள் நடந்துள்ளது உண்மைதான்,'' என, ஆந்திர அரசின், தலைமை செயலர், எல்.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 1,381 கிலோ தங்கம், சென்னை, பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து, திருப்பதிக்கு கொண்டு செல்லும் வழியில், தேர்தல் ஆணையத்தின், பறக்கும் படையினரால் தமிழகத்தில், கைப்பற்றப்பட்டது.இது குறித்து, ஊடகங்களில் வெளி வந்த செய்திகள், தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்தின.

உத்தரவு:இது பற்றி, விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என, தேவஸ்தான அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை செயலருக்கும், ஆந்திர அரசின், தலைமை செயலர், சுப்ரமணியம் உத்திரவிட்டார். அதன்படி நேற்று, வருவாய்த்துறை செயலர், மன்மோகன் சிங், தலைமை செயலரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

அது குறித்து, தலைமை செயலர் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கம், சென்னை வங்கியிலிருந்து, எடுத்து வரப்பட்டது குறித்து, முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடுவின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டது. தங்கத்தை எடுத்து வந்ததில், தவறுகள் நடந்துள்ளது உண்மை தான். அதிக மதிப்பிலான, தங்கம் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது கட்டாயம்.

கடமை:ஆனால், இதில், தேவஸ்தான அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் அஜாக்கிரதையாக நடந்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் உள்ள போது, அரசு அதிகாரிகள், விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Indhuindian - Chennai,இந்தியா

  இந்த தங்கத்தை எதற்காக கொண்டு வர சொன்னார்கள் தேவஸ்தானத்தார். அதற்காக TTD போர்டில் ஏதாவது விவாதிக்கப்பட்டதா அப்படியென்றால் அதை ரெகார்ட் செய்திருப்பார்கள் அது இருக்கறத அல்லது எல்லாமே வாய் வார்த்தையாகத்தான் நடக்கிறதா? இப்போதது ஆயிரம் கிலோ தங்கத்திற்கு என்ன தேவை. கைவசம் தங்கமே இல்லையா. எங்கேயோ இடிக்கிறதே. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஏடு கொண்டலவாடா வாதான் இதெற்கெல்லாம் ஒரு முடிவை சொல்லவேண்டும். ஆட்சி மாற்றம் என்று கருத்து கணிப்பு சொல்கிறதே அதற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தெரிய வில்லையா? ஏற்கனவே நாயுடு காரு மேலே ஏகப்பட்ட புகார் இருக்கு இதையும் சேத்துக்கவேண்டியதான்

 • Manikandan Sivalingam - delhi,இந்தியா

  குழந்தையே இல்லாதவறுக்கு எதற்காக இவ்வளவு தங்கம்?

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  இங்கேயும் ஒரு மண்ணு மோகனா.. மண்ணு மோஹன்னாவே இப்படித்தான் போல

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  இது திருப்பதி தங்கம்தான் நம்புங்க .. பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் தேவையில்லை ... கடந்த 2016 ல் தேர்தலின்போது திருட்டுத்தனமாக கொண்டுசெல்லப்பட்ட 3 கண்டைனர் பணம் பிடிபட்டு, 3 நாட்களுக்கு பிறகு SBI பணம் என்று அறிவிக்கப்பட்டதே , அதுபோலத்தான் .. நீங்க நம்பித்தான் ஆகணும்

 • விவசாயி - Tiruppur,இந்தியா

  தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவு வருவதற்குள் தங்க கட்டிகளை பத்திரமாக வைக்க நாயுடுக்கு உள்ள அக்கறை புல்லரிக்கவைக்கிறது...

Advertisement