Advertisement

ராம் ரஹீம் கோட்டையை பிடிப்பது யார்? : சிர்சாவில் நான்கு முனை போட்டி

ஹரியானாவில், சர்ச்சைக்குரிய சாமியார், ராம் ரஹீமின் கோட்டையாக விளங்கும், சிர்சா தொகுதியை கைப்பற்ற, காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தின், 10 லோக்சபா தொகுதிகளுக்கு, மே, 12ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு, காங்கிரஸ், பா.ஜ., மற்றும் இந்திய தேசிய லோக் தளம் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே தான், கடும் போட்டி நிலவுகிறது.இந்த தொகுதிகளில், சிர்சா லோக்சபா தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. 1962 முதல், 1988 வரையிலும், 1991 முதல், 1998 வரையிலும், காங்கிரசின் ஆதிக்கத்தில், சிர்சா இருந்தது.இதையடுத்து, 1998 தேர்தலில், இந்திய தேசிய லோக்தளம் கட்சி வெற்றி பெற்றது. பின், 1999ம் ஆண்டும், அதை தொடர்ந்து, 2014 தேர்தலிலும், லோக்தளம் வெற்றி பெற்றது.இடையே, 2004 மற்றும் 2009 தேர்த லில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த தொகுதியில், சீக்கிய மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படும், தேரா சச்சா சவுதாவின் தலைவர், ராம் ரஹீமின் ஆதரவு பெறும் கட்சிகளே வெற்றி பெறுகின்றன.இந்த அமைப்பின் ஆதரவை, மறைமுகமாக பெறும் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார். கடந்த தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்த, இந்திய தேசிய லோக்தளம் கட்சிக்கு, தேரா சச்சா சவுதா அமைப்பு ஆதரவு அளித்தது.


அதனால், அந்த அமைப்பின் வேட்பாளர், சரஞ்சீத் சிங் ரோரி வெற்றி பெற்றார். இந்த முறை, இந்திய தேசிய லோக்தளம் கட்சியே, இரண்டாக பிளவுபட்டுள்ளது.லோக்தளம் கட்சியில் இருந்து பிரிந்த, ராம் ரஹீமின் நண்பர், எம்.பி., துஷ்யந்த் சவுதாலா, ஜனநாயக் ஜனதா கட்சி என்ற ஒன்றை துவங்கியுள்ளார். அதனால் ஓட்டுகள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர், ராம் ரஹீம், கற்பழிப்பு குற்றத்திற்காக தண்டனை பெற்று, சிறையில் உள்ளார்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காங்கிரசும், பா.ஜ.,வும் தனித்தனி யாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. லோக்தளம் சார்பில், தற்போதைய, எம்.பி., சரஞ்சித் சிங் ரோரியே, மீண்டும் தேர்தலில் நிற்கிறார்.ஜனநாயக் ஜனதா கட்சியும், வேட்பாளரை நிறுத்தியுள்ளது. எனவே, ராம் ரஹீமின் கோட்டையை பிடிக்க, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கற்பழிப்பு குற்றவாளி
தற்போது, 51 வயதாகும், ராம் ரஹீம், கற்பழிப்பு மற்றும்பத்திரிகையாளர் கொலை குற்றத்திற்காக, சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். வலுக்கட்டாயமாக ஆண்களுக்கு கருத்தடை செய்தது, கலவரத்தை துாண்டியது, பெண்களிடம் அத்துமீறியது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது என, இவர் மீது, பல வழக்குகள் உள்ளன.இவர் நடித்து வெளியான, இசை ஆல்பங்கள், சினிமா படங்களுக்கு, சிர்சா பகுதியில் ஏகப்பட்ட கிராக்கி.சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும், ராம் ரஹீம் வைத்ததே சட்டம் என்ற நிலையில், இந்த பகுதி உள்ளது.- ஸ்மிருதி சர்மா -சிறப்பு செய்தியாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • மதுவந்தி -

    ராம் ரஹிம்கம்பிகளுக்ககு பின். இன்னமும் அவனை கோட்டைக்கு சொந்தக்காரன் போல் பேசக்கூடாது. பெண்களை மதிக்கும் நல்லவர்களின் ஆட்சி அமைய வேண்டும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ராம் ரஹீம் வைத்ததே சட்டம் என்ற நிலையில், இந்த பகுதி உள்ளது. மக்கள் சிந்திக்க தெரியாத கூட்டங்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது...

  • sivan - Palani,இந்தியா

    கண்ராவி ஏன் மக்கள் இவ்வளவு கீழ்த்தரமான ஒருவனை ஆதரிக்கிறார்களோ தெரியவில்லை

Advertisement