Advertisement

அதிக ஓட்டுப் பதிவு; கேரள முதல்வர் கடுப்பு

கொச்சி: கேரளாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக ஓட்டுப் பதிவு நடந்தது குறித்து, கேள்வி கேட்ட நிருபர்களிடம், கேரள முதல்வர், பினராயி விஜயன் கோபமடைந்தார்.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 20 லோக்சபா தொகுதிகளுக்கு, 23ல் தேர்தல் நடந்தது. கடந்த, 30 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, 77.68 சதவீத ஓட்டுப் பதிவு நடந்துள்ளது. காங்., தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், பா.ஜ.,வும் கடுமையான போட்டியை கொடுத்துள்ளது.



இந்நிலையில், கொச்சியில், அவரைச் சந்தித்த நிருபர்கள், அதிக அளவு ஓட்டுப் பதிவு குறித்து, அவரிடம் கருத்து கேட்டனர். கோபமடைந்த, பினராயி விஜயன், 'தள்ளிப் போங்க' என, அவர்களை விரட்டியடித்தார். எப்போதும் சாந்தமாக இருக்கும், முதல்வர் பினராயி விஜயனின் இந்த கோபம், நிருபர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

  • madhavan rajan - trichy,இந்தியா

    நிறைய பேர்கள் ஒட்டு பதிவு செய்ததற்கு இவர் ஏன் கோபப்பட வேண்டும். காரணமே புரியவில்லை.

  • Nathan - Hyderabad,இந்தியா

    பூஊம் கிண்கிணிம் கிண்கிணிம் , நகருங்கப்பா , தாரா தப்படைக்கு வழி உடுங்க, வருது வருது நாற்காலில உக்காந்து வருது.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

    'தள்ளிப்போங்கள்' என்று மீடியாவும், கேரளமக்களும் பினராயியை சொல்லும் காலம் வெகுதூரத்திலில்லை. பினராயி நிலை இனி என்னவாகும்? எத்தனை பேர் அறிவுரை சொல்லியும் சக்திமிக்க அந்த ஐயப்பனோடு பிடிவாதமாய் போட்டி போட்டார். விளையாட எண்ணம் கொண்டார். விளைவு, இப்படி எல்லோரிடமும் கோபப்படவேண்டியதாயிற்றே.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    இவர் மட்டும் அல்ல , இந்தமுறை எல்லா தலைவர்களும் பயத்துடனேதான் உள்ளார்கள் ... ஆனால் வெளியே காட்டுவதில்லை

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Tholvi Payam was shown ly on these poor media persons and what else these Politicians can do.

Advertisement