Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'என் கணவர், வாத்ரா உட்பட...' என்ற மன ஓட்டத்துடன், காங்., பொதுச்செயலரும், கட்சி தலைவர்ராகுலின் சகோதரியுமான பிரியங்கா பேட்டி:இப்போதைய மத்திய அரசால், மக்கள்எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆட்சி மாற்றத்தைவிரும்புகின்றனர்.

அரவக்குறிச்சி தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர், ஷாகுல் அமீது பேட்டி: அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள குறைகள் குறித்து, வாக்குறுதிகளை தயார் செய்து வருகிறோம். அ.தி.மு.க., - தி.மு.க.,வை விட, எங்களின் வாக்குறுதிகள், வீரியம் வாய்ந்ததாக இருக்கும்.மற்ற கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அதை சட்டரீதியாக சந்திப்போம். அ.ம.மு.க.,விடம் பணம் இல்லை; கொள்கைகள் உள்ளன. அதை வைத்து மக்களை சந்தித்து, வெற்றி பெறுவோம். சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும், தினகரனை ஆதரிப்பர்.


தமிழக, காங்., தலைவர்,அழகிரி பேட்டி:காங்., கட்சியின் தலைவர், சர்தார் வல்லபாய் படேலின் சிலையை, 3,௦௦௦ கோடி ரூபாய் செலவு செய்து, மோடி நிறுவியுள்ளார்.இதற்கு பதிலாக, மாநிலங்களில், 30 மருத்துவக் கல்லுாரிகளைக் கட்டி, அதற்கு, சர்தார் வல்லபாய் படேல் பெயரை வைத்திருந்தால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பர். மக்கள், 'மோடியே, திரும்பிப் போ' என, வாயால் மட்டும் சொல்லாமல், ஓட்டு சீட்டுகளாலும் சொல்லி உள்ளனர்.


மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி பேச்சு:நாட்டின் வரலாற்றிலேயே, இவ்வளவு நீண்ட நாட்களுக்கு தேர்தல்நடத்தப்பட்டது கிடையாது. கோடையின் உச்சத்தில் லோக்சபா தேர்தல் நடத்தப்படுவது, நம் துரதிருஷ்டம். லோக்சபா தேர்தல், பா.ஜ., தலைவர்களுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது.ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு பிரசாரத்திற்காக, பா.ஜ., தலைவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக, அதற்கேற்றவாறு தேர்தலை திட்டமிட்டுள்ளனர்.


சமாஜ்வாதி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ் பேட்டி:நாடு முழுவதும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. எந்தக் கட்சிக்கு ஓட்டளித்தாலும், பா.ஜ., சின்னத்தில் ஓட்டு பதிவாகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை முறையாக பயன்படுத்த தெரியாத, 350க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முறையான பயிற்சி இல்லாத அதிகாரிகளால், ஓட்டுப் பதிவு இயந்திரத்தை சரிவர இயக்க முடியவில்லை. இது தான், மத்திய அரசு வாக்குறுதி அளித்த, 'டிஜிட்டல்' இந்தியாவா?


தேசியவாத காங்., தலைவர், சரத் பவார் பேட்டி: பிரதமர் மோடி தலைமையிலான அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் உள்ளனர். ஆனால்,ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் நடக்கும் மோசடி மட்டுமே, கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement