Advertisement

செயற்கை மாய்ஸ்சரைசரை தவிர்க்கலாம்!

செயற்கை 'மாய்ஸ்சரைசரை' தவிர்க்கலாம்!
அம்மை தழும்புகளை இயற்கை முறையில் நீக்க வழி கூறும், சரும மருத்துவர், சிவகுமார்: வெயில் காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது, அம்மை. சில வாரங்களில் அம்மை சரியாகி விட்டாலும், அதனால் உடலில் ஏற்படும் தழும்புகள், அப்படியே இருக்கும்.உடலில் அம்மைத் தழும்பு உள்ளவர்கள், கோடைக்காலத்தில் சருமத்தில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
தழும்புகள் இருக்கும் பகுதிகளில், ஈரப்பதத்தை அதிகரிக்க, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், 'லிக்விட் பாரபின்' போன்றவற்றை பயன்படுத்தலாம்.முகம், கை போன்ற பகுதிகளில் வெண்ணெயால், 'மசாஜ்' செய்யலாம். செயற்கை, 'மாய்ஸ்சரைசர்'களை தவிர்க்க வும்.சோற்றுக் கற்றாழையில், நோய் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா அழிப்பு பண்புகள் உள்ளன. இதை பயன்படுத்துவதால், சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, வடுக்கள் மறையும்.கற்றாழையின் உள் பகுதியில் உள்ள ஜெல்லை, ஒருநாளில் அதிகபட்சம் நான்கு தடவை, சருமத்தில் பூசலாம். கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதை விட, நேரடியாக கற்றாழையிலிருந்து எடுத்து, பயன்படுத்துவதே சிறந்தது.அம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட -கொப்பளங்கள் குணமாகும்போது, அவற்றை சுற்றியிருக்கும் பகுதியில், எரிச்சலும், அரிப்பும் எடுக்கும். சொரியும்போது வடுக்கள் அதிகரிக்கும். அரிப்பைத் தடுக்க, 'பேக்கிங் சோடா'வில் தண்ணீர் கலந்து, வடுக்களின் மீது தடவலாம். இது, சருமத்திலிருக்கும் இறந்த செல்களை நீக்கி, எரிச்சல் உணர்வை குறைக்கும்.வைட்டமின், 'ஈ' அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், வடுக்கள் இயற்கையாகவும், வேகமாகவும் மறையும். கீரை வகைகள், பச்சை நிற காய்கறிகள், பப்பாளி, நட்ஸ், அவகேடோ போன்றவற்றில், இவை அதிகம் உள்ளது.தினமும் இளநீர் குடித்தாலும், தழும்புகள் விரைவாக குணமாகும். இளநீரில், சருமத்துக்கு தேவையான, 'சைட்டோகைன்ஸ்' நிறைந்திருப்பதால், ஈரப்பதம் குறையாமல் இருக்கும்; சரும் வெடிப்புகளையும் தடுக்கும். வடு அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதை நேரடி, 'மாய்ஸ்சரைசராக' கூட பயன்படுத்தலாம்.அம்மை நோய் பாதிப்பு சரியானதும், முதலில் சில தினங்கள், தினமும், ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை, மேலே குறிப்பிட்டுள்ள இயற்கையான ஏதேனும் ஒரு மாய்ஸ்சரைசரை வைத்து, மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.அம்மை நீங்கி, ஏழு நாள்களுக்கும் மேல் வடு குறையாமல் இருந்தால், தாமதிக்காமல், சரும மருத்துவரிடம், ஆலோசனை பெறுவது நல்லது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement