Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தன்னார்வ அமைப்புகள் பல, சுற்றுச்சூழல் மாசை நீக்க போராடிட்டு இருக்கு... நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களை அவை போல செயல்பட உத்தரவிட்டு, வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கொண்ட அரசியல் தலைவர் எனப் பெயர் எடுக்கலாமே... செஞ்சா, அடுத்த தேர்தல்ல, ஓட்டையும் அள்ளலாமே... சிந்தியுங்களேன்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிக்கை: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடக்கவில்லை. இதனால், மக்களின் அடிப்படை பிரச்னைகள் எல்லாம், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே, குப்பை மேடுகள் போல் குவிந்து நிற்கின்றன. தமிழகம் முழுவதும், குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. தி.மு.க., வழக்கு போட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்ற, ஒரு பொய் பிரசாரத்தை மேற்கொள்ளும் முதல்வர், இ.பி.எஸ்., தான், இப்போது உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், கால அவகாசம் பெற்று வருகிறார்.

துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேச்சு: இலங்கை சுற்றுலா துறையை முடக்க வேண்டும் என்ற நோக்கில், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டு உள்ளது. உலக அளவில், இந்தியா உட்பட எந்த நாடுகளுக்கும், பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. உலக அளவில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை, பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.


பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் பேட்டி: மோடியின் தலைமையில் தான், இந்திய ராணுவம் வலிமைமிக்கதாக மாறியது. காங்கிரஸ், 130 கோடி மக்களின் பாதுகாப்பு விஷயத்தில், அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ராஜதுரோக குற்றச் செயலுக்கு எதிரான சட்டத்தை, 'வாபஸ்' பெறப் போவதாக தெரிவித்துள்ளது. இது, நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல; பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயலுமாகும்.


ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு பேச்சு: எதிர்க்கட்சி கூட்டணியில் பிரச்னை நிலவுவது, உண்மை தான். அதேநேரத்தில், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறாது. 150 தொகுதிகளுக்கு மேல், அக்கூட்டணியால் வெற்றி பெற முடியாது. ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த வெற்றி, 1,000 சதவீதம் உறுதியாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement