Advertisement

டவுட் தனபாலு

காங்.,கைச் சேர்ந்த, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா: மோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும்.

டவுட் தனபாலு: 'காங்., மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால், கட்சி தாங்காது... அடுத்த, ஐந்தாண்டில், காங்., கரைந்துவிடும்'னு, வெளிப்படையாகச் சொல்லுங்க... அதை விடுத்து, எதற்கு இந்த பூச்சாண்டி எல்லாம் என்பதுதான், என்னோட, 'டவுட்!'

-நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா: 'பா.ஜ., கொள்கை பிடித்திருக்கிறது' என்று, ரஜினி கூறினாரே தவிர, 'பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள்' எனக் கூறவில்லை.


டவுட் தனபாலு: தமிழகத்தில், தேர்தல்களின் கதாநாயகனே, தேர்தல் அறிக்கை தான் உங்களுக்குத் தெரியாதோ... அதை வைத்துத்தான், கட்சிகள் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவது, காலங்காலமாக நடக்குது... இந்த நிலையில், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களை, ரஜினி வரவேற்பது, இதுபோன்ற, 'டவுட்'களை எழுப்பாமல் இருக்குமா... இதற்குத்தான், எதையும் முழுதாகச் சொல்லணும்...!



த.மா.கா., தலைவர் வாசன்: தனித்து நிற்கும் கட்சிகளின் உண்மை நிலை, தேர்தல் திருவிழாவின் போது தெரியாது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் பார்த்தால், கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்குத் தான், ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கும்.


டவுட் தனபாலு: நேற்று கட்சி துவங்கிய கமலெல்லாம், துணிந்து, தனியா நிற்குறாரு... நீண்ட கால அரசியல் பாரம்பரியம் கொண்ட நீங்களோ, தேர்தல் திருவிழாவில் காணாமல் போயிடுவோம்னு பயந்து, பெரிய கட்சிகளின் கையை பிடிச்சுட்டீங்க... இதை ஒப்புக் கொள்ளுங்க... அதை விடுத்து, எதை எதையோ பேசினால் எப்படிங்கறது தான், தமிழக மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement