Advertisement

கொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

கொழும்பு: கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இலங்கையில், 'ஈஸ்டர்' தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 225 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணையதள சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமான நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். வேறு வெடிகுண்டுகள் ஏதும் பதுக்கப்பட்டுள்ளதா என இலங்கை முழுவதும் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (38)

  • svs - yaadum oore,இந்தியா

    //,,,சமீபகாலங்களில் எங்கள் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களிடம் மாற்று மதசகிப்பின்மை..//.....சகிப்பின்மை வளர என்ன காரணமாம்?? வட நாட்டில் பா ஜ க ஆதரவு அதிகம்... அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அதற்கு இங்குள்ளவன் என்ன செய்ய முடியும்?? ஐந்து வருடமாக தமிழன் தமிழன் என்று உசுப்பேத்தி தமிழ் நாட்டை போராட்ட களமாக மாற்றினார்கள்.....இதெற்கும் மேல் இங்குள்ளவன் என்ன செய்ய வேண்டுமாம்? தமிழ் நாடு என்ன தனி நாடாக மாற வேண்டுமா?? அது ஒருக்காலும் நடவாத காரியம்... இங்கு இலவசங்களுக்கு வோட்டு போடும் அப்பாவி மக்கள் ...... பொள்ளாச்சியில் நம் வீடு பெண்கள் மானம் போனாலும் அதற்கு பின்னும் காசு வாங்கி வோட்டு போடுபவர்களை என்ன வென்று சொல்வது?? முதலில் இலங்கை குண்டுவெடிப்புக்கு கணடனம் தெரிவித்து இங்குள்ள பிரச்னையை தீர்க்க பார்ப்போம் ....அங்குள்ள தமிழ் முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள், அவ்வளவுதான் . ...அவர்கள் இனம் தமிழ் என்று அவர்களே சொல்லவில்லை ...அதற்குமேல் இங்குள்ள அரசியல் கட்சிகள் இதில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை .....மதத்துக்கு மேல் நாடு ....இதுதான் நிதர்சனம் .....

  • S MURALIDHARAN - delhi,இந்தியா

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இதற்கு விடிவுகாலம் இந்த உலகத்தில் இருந்தே ....

  • nicolethomson - bengalooru,இந்தியா

    என்னங்க நடக்குது , இதற்கெல்லாம் ஒரு விடிவு காலமே இருக்காதா?

  • Nathan - Hyderabad,இந்தியா

    அந்த மத வெறி பைத்தியம் நியூசீலாந்தில் மசூதியில் சுட்டு இந்த பைத்தியங்களை லங்கையில் உசுப்பேத்தி விட்டுட்டுதோ?

Advertisement