Advertisement

இலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப்

வாஷிங்டன் : இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.

இலங்கையில், 'ஈஸ்டர்' தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 225 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பல நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

138 மில்லியனா?




இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இதில் 138 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டார்.

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் பதிவிட்ட டிரம்பை, சமூக வலைதள வாசிகள் கேலி செய்து வருகின்றனர். இதனையடுத்து அவரது டுவிட்டர் பதிவு 138 பேர் என திருத்தம் செய்யப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

  • sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ

    அது அட்மின் செய்த தவறு.

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

    எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவனும் மனிதன். தவறுவது சகஜம். இதை என்னவோ. அவர கிண்டல் பண்றவங்க எல்லாரும் அப்படியே ரைட்டா இருக்கிற மாதிரி, கமெண்ட் போடுறது அயோக்கியதனமில்ல. கமெண்ட் போட்டு கிண்டல் பண்ணவங்க... அவங்கவங்க முதுகின் நடுவுல இருக்குற அழுக்க பார்த்துட்டு... அப்புறம் அடுத்தவன் முதுகுல இருக்குற அழுக்க பத்தி கமெண்ட் போடட்டும்....

  • Dinesh Pandian - Hyderabad,இந்தியா

    மில்லியன் டாலர் ல பிசினஸ் டீல் பண்ணுவரு போல .

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    எல்லாம் நம்ம பிரேமலதா - தே.மு.தி.மு.க உளறல் திலகம் - இந்தியா (எல்லா மாநிலங்களிலும்) அனைத்தும் 18ம் தேதி தேர்தல் ஓட்டளிப்பதற்கு முன் சொன்னது. இதைப்போலத்தான் இதுவும் தெரிகின்றது. இல்லையென்றால் பாவம் டைப் கூட செய்யத்தெரியாது என்று நினைக்கின்றேன், யாரிடமோ உளற அவன் இவரை மதிப்பிளக்க செய்ய செய்ததாக கூட இருக்கலாம். நிச்சயம் யாரும் மில்லியன் என்று சொல்லவே மாட்டார்கள். உடனே டிவீட்டரில் மன்னிப்பும் கேட்டு விட்டார், அதை மாற்றியும் விட்டாரே.

  • Makitha Maki - Pudukkottai,இந்தியா

    பெட்டெர் தான் பழி தி அட்மின் (ஹி ஐஸ் டிரம்ப், நாட் லைக் H ராஜா)

Advertisement