Advertisement

நாகையில் எண்ணெய் கிணறு : ஓ.என்.ஜி.சி ஆய்வு

நாகை : நாகப்பட்டினத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகள் அமைப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க ஓ.என்.ஜி.சிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் 40 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையிடம், ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில் எண்ணெய் கிணறுகள் அமைய உள்ள இடத்தில் 41 தர விதிமுறைகளின்படி ஆய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

கிணறுகள் தோண்டுமிடத்தில் தண்ணீர் மற்றும் காற்றின் தரத்தை மதிப்பிடுதல், திட்டத்தின் மதிப்பீடு மற்றும் பயன்கள், உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கையாளும் திறன், கழிவு எண்ணெயை உபயோகிக்கும் திறன் உள்ளிட்ட 41 விதிமுறைகளின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இருக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (35)

  • ஆப்பு -

    . தஞ்சாவூர் ஆயில்...கோதாவரி தண்ணீர்...

  • ஆப்பு -

    அதான் தேர்தல் முடிஞ்சாச்சே...அவிங்களும் கை வரிசையைக் காட்டுவாங்க... இவிங்களும் கண்டுக்காம போவாங்க...

  • Uthiran - chennai,இந்தியா

    டுமிலன்ஸ், டுமீல் போராளிகள் எங்கிருந்தாலும் உடனே வரவும். சொடலை உங்கள் போராட்டத்திற்கு தேவையான அனைத்து விதமான பின்னணி உதவியும் செய்வார் (இடை தேர்தலில் படு தோல்வி அடைந்தால் மட்டும்).

  • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

    They will not let Tamil Nadu Progress Whether it is Nutrino, Methane, six lane express way or Sterlite , they will ensure Tamil Nadu remains backward to progress their own agenda

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    ONGC யின் வியாபாரம் உயரும் போது அதில் முதலீடு செய்தவர்களின் பங்குகளின் மதிப்பும் உயரும் இதனால் பங்கு சந்தையில் முதலீடுகள் செய்துள்ளவர்கள் வருமானம் உயரும், எனவே ONGC யின் இந்த எண்ணெய் கிணறுகள் அமைக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...........

Advertisement