Advertisement

4 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்

சென்னை : தமிழகத்தில், இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல், இன்று(ஏப்.,22) துவங்குகிறது.

தமிழகத்தில், காலியாக உள்ள, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், அடுத்த மாதம், 19ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, நான்கு தொகுதிகளிலும், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது; ஏப்ரல், 29 வரை, மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள், ஏப்., 30ல் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், மே, 2 மாலை, 3:00 மணிக்குள், வாபஸ் பெற வேண்டும். அதன்பின், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். நான்கு தொகுதிகளிலும், மே, 19ல் ஓட்டுப்பதிவு நடைபெறும். மற்ற தொகுதிகளுடன் சேர்த்து, பதிவான ஓட்டுக்கள், மே, 23ல், எண்ணப்படும்.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு:




இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் இன்று (ஏப்.,22) அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பணி குறித்து விவாதிக்க, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உட்பட, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் ஒருவருக்கு வேணாமென்றால் பலருக்கு இது தான் நான்கு தொகுதி மக்களுக்கு.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    காசு கொடுப்பவர்களுக்கு வாக்கு கொடுக்காதீர்கள்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நான்கு செல்வந்தர்களை உருவாக்க விண்ணப்பம் கொடுக்கும் நாள்

Advertisement