Advertisement

மே, 19ல் வேலூர் தொகுதியில் தேர்தல்: ஏ.சி.சண்முகம் கோரிக்கை

வேலூர்: வரும் மே, 19ல் நடக்கும் நான்கு சட்டசபை இடைத்தேர்தலுடன் சேர்த்து, வேலூர் தொகுதிக்கும் தேர்தல் நடத்த, வேலூர் அ.தி.மு.க.,க கூட்டணி வேட்பாளர், ஏ.சி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்தலை நடந்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர், ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து, ஏ.சி.சண்முகம் வேலூரில், நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, அடுத்த மாதம், 19ல் தமிழகத்தில் நடக்கும், நான்கு சட்டசபை தொகுதி தேர்தலோடு, வேலூர் தொகுதியிலும், தேர்தல் நடத்த வேண்டும். மே, 19ல், தேர்தல் நடந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம். உச்சநீதிமன்றத்துக்கு செல்லவில்லை. தி.மு.க., வேட்பாளர் செய்த தவறால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. நான் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என தெரிந்தே, சுய விளம்பரத்துக்காக, வழக்கு போடுவதாக துரைமுருகன் கூறுவது தவறு. என்னோடு சேர்த்து, தி.மு.க., வேட்பாளரும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். தோல்வி பயத்தில், அவர்கள் வழக்கு தொடுக்கவில்லை. நான் தேர்தல் நடக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், தேர்தலை நடக்கக்கூடாது என, துரைமுருகன் நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement