Advertisement

தெற்கு சட்டசபை தொகுதியில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சேலம்: சேலம் தெற்கு தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில், மாநகராட்சி கமிஷனர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். சேலம் தெற்கு தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான சதீஷ், குளூனி மெட்ரிக் பள்ளியில், நேற்று ஓட்டுப்போட்டார். தொடர்ந்து, தெற்கு சட்டசபை தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், பாதுகாப்பான முறையில் ஓட்டுப்பதிவு, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, நிழலுக்கு பந்தல் அமைத்தல், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
போலீஸ் ஸ்டேஷனில்...: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்று காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடந்தது. இந்நிலையில் மாலை, 4:00 மணிக்கு மேல், சேலம் மாவட்ட எஸ்.பி., தீபா காணிகர், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், போலீசாரிடம், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் ஏதேனும் உள்ளதா, பிரச்னையின்றி முறையாக ஓட்டுப்பதிவு நடக்கிறதா என, கேட்டறிந்தார். பின், அங்கிருந்து ஆத்தூருக்கு சென்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement