Advertisement

பதற்றமான சாவடிகளில் எஸ்.எஸ்.பி., பாதுகாப்பு

ஓமலூர்: பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், எஸ்.எஸ்.பி., வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் லோக்சபா தொகுதி, ஓமலூர் சட்டசபை தொகுதியில், இரண்டு லட்சத்து, 82 ஆயிரத்து, 559 வாக்காளர்கள் உள்ளனர். அதில், காமலாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, தாராபுரம் ஆகிய ஓட்டுச்சாவடி மையங்கள், பதற்றமானதாக கண்டறியப்பட்டன. அங்கு, ஓட்டுப்பதிவு நாளான நேற்று, உள்ளூர் போலீசாருடன், எஸ்.எஸ்.பி.,(சாஸ்திரா சீமா பால்) எனும், 'பாரா மிலிட்டரி' வீரர்கள் துப்பாக்கி ஏந்தி, ஒரு கமாண்டர் தலைமையில் மூவர், பணியில் ஈடுபட்டனர். அந்த ஓட்டுச்சாவடிகளில், காலை முதலே, மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement