Advertisement

'பூத்' பணிக்கு ஆளில்லாத ம.நீ.மை.,

சேலம்: ஓட்டுச்சாவடி முகவர் பணிக்கு கூட, மக்கள் நீதி மையத்தில் ஆட்கள் இல்லை. சேலம் லோக்சபா தேர்தலில், நேற்று, மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர். சாவடிக்கு வரும் வாக்காளர்களை, 'கேன்வாஸ்' செய்ய, 'பூத் சிலிப்' வழங்க, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி முன், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், தற்காலிக அலுவலகம் அமைத்திருந்தனர். ஆனால், மக்கள் நீதி மையம் சார்பில், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் ஆட்கள் இல்லை. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், கட்சி முகவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்களை நியமிப்பதில் கூட, மக்கள் நீதி மையத்தில் பற்றாக்குறை நிலவியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement