Advertisement

தேர்தல் ஓட்டுப்பதிவால் முக்கிய வீதிகள் வெறிச்

சேலம்: ஓட்டுப்பதிவால், சேலம் மாநகரில், பரபரப்பாக காணப்படும் அனைத்து வீதிகளும் வெறிச்சோடின.
லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவால், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நேற்று, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை, லீபஜார், சத்திரம், பால்மார்கெட், ரயில்வே கூட்?ஷட் பகுதிகளில், தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், வெறிச்சோடி காணப்பட்டன. அத்துடன், சந்தைப்பேட்டையில் நிறுத்திவைக்கப்படும் லாரிகளில் பணிபுரியும் டிரைவர், கிளீனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்களும் பணிக்கு வராததால், அப்பகுதி ஆள்நடமாட்டமின்றி இருந்தது. ஜங்ஷன், சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி உள்பட நகரின் முக்கிய வீதிகளில், டீ, காபி, கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டதால், மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

வர்த்தகம் பாதிப்பு: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், வெளியூருக்கு அனுப்பப்படும் காய்கறிகள், ரத்து செய்யப்படுவதாக, நேற்று முன்தினமே, தரகர்கள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள், விளைபொருட்களை அறுவடை செய்யவில்லை. அதேநேரம், குறைந்தளவில், விவசாயிகள், வியாபாரிகள் கூடியதால், வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement