Advertisement

புறநகரில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: மாநகரில் சரிவால் அ.தி.மு.க.,வில் கலக்கம்

சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில் புற நகரில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், மாநகரில் அதிகரித்து இருப்பது, நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் லோக்சபா தொகுதியில், இடைப்பாடி, வீரபாண்டி, ஓமலூர் ஆகிய புறநகர் பகுதிகள், சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மாநகர பகுதிகள் அடங்கியுள்ளன. புறநகர் பகுதி நிர்வாகிகள், தலைமை வழங்கிய பணத்தை வினியோகித்த நிலையில், மாநகர பகுதி நிர்வாகிகள் சுருட்டியதாக புகார் எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஓட்டுப்பதிவு அமைந்துள்ளது. புறநகரில் அதிகபட்சமாக, வீரபாண்டியில், 83, ஓமலூரில், 8?, முதல்வரின் தொகுதியான இடைப்பாடியில், 82 சதவீதம் பதிவாகியுள்ளது. மாநகரை பொறுத்தவரை, அதிகபட்சமாக, சேலம் தெற்கு, 74.99, வடக்கு, 70.39, மேற்கு, 70.43 சதவீதம் பதிவாகியுள்ளது. புறநகரில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது, அ.தி.மு.க., தொகுதி பொறுப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாநகரில் சரிவை சந்தித்துள்ளது, நிர்வாகிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: சேலம் லோக்சபா தொகுதிக்கு, வாக்காளர்களுக்கு தலா, 250 ரூபாயை தலைமை வழங்கியது. அதன்படி, புறநகரில், நிர்வாகிகள் நிறைவேற்றியதால், ஓட்டுப்பதிவு, அதை உறுதிப்படுத்தியுள்ளது. மாநகரில் பணம் சுருட்டியதாக, புகார் எழுந்ததற்கேற்ப, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதில் தலைமை மட்டுமின்றி, தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். இதனால், ஓட்டுப்பதிவு சதவீதம் சரிவுக்கான காரணம் கண்டறியப்பட்டு, பணத்தை சுருட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement