Advertisement

ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்த பதிவான மின்னணு இயந்திரங்கள்

ஓமலூர்: மூன்றடுக்கு பாதுகாப்புடன் கூடிய, ஓட்டு எண்ணும் மையத்துக்கு, பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. சேலம் லோக்சபா தொகுதியின், ஆறு சட்டசபை தொகுதிகளில், நேற்று காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட், கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றுக்கு, 'சீல்' வைத்தனர். இரவு, ஓட்டு எண்ணும் மையமான, சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், ஆறு தொகுதிகளுக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள, 'ஸ்டிராங் ரூமில்' வைக்க கொண்டு வரப்பட்டது. இரவு முழுவதும், வாகனங்கள் மூலம், பதிவான இயந்திரங்கள் வந்தன. இப்பணியை, கலெக்டர் ரோகிணி நேற்று பார்வையிட்டார். ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவில், பகல்போல் வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வளாகம் முழுவதும், 48 கண்காணிப்பு கேமராக்கள் மூலம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பதிவான இயந்திரங்கள் அனைத்தும் வந்த பின், இன்று காலை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், ஸ்டிராங் ரூமில், சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement