Advertisement

பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியீடு: பெற்றோர் உஷாராக இருக்க எச்சரிக்கை

சேலம்: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக உள்ள நிலையில், மாணவ, மாணவியரின் பெற்றோர், உஷாராக இருக்க, போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மார்ச் முதல் வாரத்தில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதில், தேர்ச்சி பெற முடியாதவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், பெற்றோர், காப்பாளர்களுக்கு பயந்து, வீட்டை விட்டு வெளியேறுதல், தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற சம்பவங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், பெற்றோர், மாணவ, மாணவியரை கவனிக்காதபட்சத்தில், அவர்கள் வீட்டை விட்டே வெளியேறி விடுகின்றனர். அவர்களை, தனிமையில் இருக்க, பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. முடிவில், மதிப்பெண் குறையும்பட்சத்தில், மாணவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும். அடுத்து வாய்ப்புள்ளது என்பதை, அவர்களுக்கு தெரிவிப்பதோடு, மாணவர்களின் மீதான கண்காணிப்பை, தீவிரப்படுத்த வேண்டும். அவர்களின் நட்பு வட்டத்தை முன் கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. முடிவு வெளியாகும் நிலையில், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கு, தனியாக அனுப்ப கூடாது. மாணவர்கள் வீட்டை வீட்டு வெளியேறுவது தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, அவர்களது புகைப்படத்துடன் புகாரளித்து, போலீசின் நடவடிக்கைக்கும், அவர்களை விரைவில் கண்டறியவும், உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement