Advertisement

தேர்தலால் வெறிச்சோடிய சென்னை

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, பொது விடுமுறைஅறிவிக்கப்பட்டதால், சென்னை வெறிச்சோடி காணப்பட்டது.லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று நடந்தது. சென்னையில், வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர்.தேர்தலையொட்டி, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 'தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.மேலும், ஓட்டுச்சாவடி மையங்களை ஒட்டி, 200 மீட்டர் சுற்றளவிற்கு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.இதனால், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அருகில் இருந்த கடைகள் மூடப்பட்டன. சென்னை மாவட்டத்தில், பல்வேறு மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள்மூடப்பட்டன.இதனால், ஓட்டல் உணவை மட்டுமே நம்பி இருந்தோர், ஏமாற்றம் அடைந்தனர். மாநகர பஸ்கள், குறைந்த அளவே இயக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளுக்கு, பஸ்கள் இல்லாமல், மக்கள் அவதிப்பட்டனர்.எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னை சாலைகள், மக்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டன; மக்கள்வீடுகளிலேயே முடங்கினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement