Advertisement

ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட நபர்

மாங்காடு: மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நபர், ஆம்புலன்சில் வந்து ஓட்டளித்து, ஜனநாயக கடமை ஆற்றினார்.மாங்காடு அடுத்த கொழுமுனிவாக்கத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 45. சமீபத்தில் இவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என்ற தனது விருப்பத்தை, அருணாச்சலம் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் தயார் செய்து கொடுத்தது. நேற்று மதியம், அந்த ஆம்புலன்சில், கொழுமுனிவாக்கம் அரசு பள்ளி ஓட்டுச் சாவடியில், அருணாச்சலம் ஓட்டுப்பதிவு செய்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement