Advertisement

ஆற்காடு அருகே போலீஸ் துப்பாக்கிச்சூடு

அரக்கோணம்:வேலுார் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் வானை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஓட்டுப்பதிவு இறுதி நேரத்தில் வாக்குச்சாவடியை நோக்கி கூட்டமாக சிலர் வந்த நிலையில், கூட்டத்தை கலைக்கவும் நிலைமையை கட்டுப்படுத்தவும் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர்.

இது தவிர பெரம்பலூர்: சிதம்பரம் தொகுதி பொன்பரப்பி, ஆம்பூர், ஆரணியில் ஓ ட்டுப்பதிவின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் லேசான தடியடி நடத்தப்பட்டது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

பானை உடைப்பு: மோதல்



சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், பாமகவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பானை ஒன்றை உடைத்தார். இதனால், பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கைகலப்பாக மாறியது. பின்னர் அங்கு வந்த பா.ம.க.,வினர் அப்பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடினர். அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க., பா.ம.க., மோதல்



வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லார் ஊராட்சியில் தி.மு.க., மற்றும் பா.ம.க., இடையே மோதல் ஏற்பட்டது.

இடைத்தேர்தல் நடக்கும் ஆம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க., அ.ம.மு.க., கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அமமுக வேட்பாளர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஒருவரின் மண்டை உடைந்தது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீசார் விரைந்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    திஷ்டி சுற்றப்பட்டுவிட்டது

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அந்தக்காலத்தில் சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் நடந்ததாம் காலையில் திமுகவினர் தங்கள் வாக்குகளை போட்டுவிட்டு பார்பனர் குடியிருப்புகளில் கலாட்டா செய்து அவர்கள் பயந்துபோய் யாரும் வரவில்லை திமுகவின் நெடுஞ்செழியன் எளிதாக வெற்றி பெற்றதாக ஒரு காங்கிரஸ் பேச்சாளர் எங்கள் ஊருக்கு வந்து பேசும்போது தெரிவித்தார் அப்போது பயங்கர வெறியாட்டம் ஆடினார்களாம் வன்முறை திமுகவின் உடன்பிறந்தது என்பதற்கு சந்தேகமில்லை

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    செய்தி: "போலீஸ் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பு". தகுதி: ரௌடியாய் இருக்கவேண்டும். பேருந்து ஆட்டோ, குடிசைகளை எரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கொலை செய்ய தெரிந்திருக்க வேண்டும். பெண்களை அறையத் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோரை எட்டி உதைக்கத் தெரிந்திருக்க வேண்டும். போராட்டம் செய்வோரை வாயில் சுடத் தெரிந்திருக்க வேண்டும். கடைகளில், வாகனங்களில் செல்வோரிடம் அடாவடி வசூல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    சென்னை மாநகராட்சி தேர்தலில் தீயமுக செய்த கொடூர வன்முறைக்கு முன்னால் எதுவுமே நிற்காது. அப்போது அவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் இன்றும் குலை நடுங்கச் செய்கிறது. அராஜகத்தின் உச்சம் தொட்ட தேர்தல் அதுதான்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    பானை உடைத்தவன் பாடு பாவம்...சுடுகாட்டுல ஒடைச்சிருந்தா தப்பிச்சு இருக்கலாம்..

Advertisement