Advertisement

ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற சதி: திமுக புகார்

சென்னை: ஓட்டுச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் டிஜிபிக்கு அனுப்பிய கடிதம்: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு துவங்கிய காலை முதல் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக ஓட்டு போட்டு வருவதை பொறுத்து கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3.00 மணிக்கு மேல், தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.இதற்கு போலீசாரும் ஒத்துழைக்கும் வகையில், போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும், ஓட்டுச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை இந்த நேரத்தில் செயலிழக்க செய்ய போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

காங்., கோரிக்கைஇதனிடையே, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட இடங்களில் ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (44)

 • C.Elumalai - Chennai,இந்தியா

  அதுவேற ஒன்றுமில்லைங்க,2006 திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலில்,தீயமுக குண்டர்கள்,வாக்குசாவடியையும்,வாக்குசீட்டு,கட்டுகளையும்,தூக்கிசென்றது,விஞ்ஞானதிருடனின் வாரிசுக்கு ஞாபகம் வந்திடுச்சு.தான்திருடி,அடுத்தவங்களை நம்பாதவள்,சுடலைக்கு கண பொருத்தம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தேர்தல் முடிந்து கைல வெச்ச மை கூட காயவில்லை..அதற்கு ளளாகவே இந்த பாஜக என்கிற இனமதஜாதிவெறிக் கூட்டம், அவமரியாதையாக, அநாகரிகமாக எழுத ஆரம்பித்து விட்டது. இந்த கட்சி க்கு வாக்களித்த தன்மானமற்ற மனிதர்கள் ரகசியமாக தலையில் அடித்து கொள்ளவும். இனி ரிசல்ட் வந்த பிறகு என்ன கேவலமெல்லாம் இவர்களால் அரங்கேற்றப்படுமோ?

 • Sathya -

  Always some complaints without any substance. Becoming insane for power to make more money this Sudalai

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  மே 23 அன்று சொல்லவேண்டிய சதவீத கணக்குகள் தமிழக மக்கள் மீதான வசவுகள் எல்லாம் தயாரா சுடலையாண்டி?

 • shan - jammu and kashmir,இந்தியா

  தோற்க போகிறோம் என்பது தெரிந்து விட்டதோ ? உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை கேட்டு இடைதேர்தல் நடத்த தடை இப்ப 2000 கொடுக்க தடை என்று எதுக்கெடுத்தாலும் எழமாட்டாத காரியம் செய்யும் பொது மக்கள் மட்டுமல்ல கட்சி கரனுக ஓடிடுவானுகள்

Advertisement