Advertisement

சட்டம் ஒழுங்கு பிரச்னையில்லை: சாஹூ

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த சத்யபிரதா சாஹூ கூறியதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதான இடங்களில் உடனுக்குடன் மாற்றப்பட்டது. அரை மணி நேரத்திற்குள் மாற்றப்படும். காலை 6 மணி முதல் 8 மணிக்குள் 305 எந்திரங்களில் மாற்றப்பட்டுள்ளன. மற்றப்படி எந்த பிரச்னையும் இல்லை. தேர்தல் சுமூகமாக நடக்கிறது.


பூத் சிலிப் இல்லா விட்டாலும் ஓட்டு போடலாம். இதனை, அடையாள சான்றாக பயன்படுத்த முடியாது. வாக்காளர் அட்டை, உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி கொள்ளலாம். தேர்தல் நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. டோக்கன் வாங்கியவர்கள் அனைவரும் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாலை அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் எழவில்லை. இது தொடர்பாக தேர்தல் சிறப்பு டிஜிபியுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரிரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. கன்னியாகுமரியில் 100 பேர் பெயர் பட்டியலில் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் கவனத்தில்எடுத்து கொள்ளப்படும். தாமதமாக வரும் வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு சத்யபிரதா சாஹூ கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சாஹுக்கு ஒரு சின்ன ஷொட்டு

  • nicolethomson - bengalooru,இந்தியா

    நீங்க என்ன சொன்னாலும் தேர்தல் பணியாற்றிய பெண்களுக்கு வீடு போயி சேரும்வரை இருந்த ஸ்ட்ரெஸ் உங்களால் தீர்க்க முடிந்திருக்காது , அவர்களின் பாதுகாப்பு இந்த தேர்தலில் மிகப்பெரிய கேள்விக்குறி

  • mindum vasantham - madurai,இந்தியா

    மக்கள் needhi mayyam 5% mel vottu vaangukirathu

  • Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா

    எலேச்டின் கமிஷன்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    வரும் தேர்தல்களிலாவது முதல் நாளிலே சரி செய்து நல்ல இயந்திரங்களை வைக்க வேண்டும்.

Advertisement