Advertisement

அரசியல் தலைவர்கள் ஓட்டளிப்பும், கருத்துகளும்

சென்னை: லோக்சபா தேர்தலில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார். அவருடன் மனைவி துர்கா சென்றார்.

ஸ்டாலின், ஓ.பி.எஸ்., வைகோ



இது போல் சென்னையில் பா.ஜ., தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கனிமொழி ஆகியோரும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். திமுக பொதுசெயலர் அன்பழகன் உடல் நலம் சரியில்லாததால், ஓட்டுப்போட, அவர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். நாகர்கோவில் எஸ்.எல்.பி., பள்ளியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், கலிங்கப்பட்டியில் வைகோ, ஓட்டளித்தனர்.

தேனி பெரியகுளம் செவன்த் டே பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டு பதிவு செய்த துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.


மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, திண்டிவனம் அவ்வையார் குப்பம் பகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம், விருதுநகர், திருத்தங்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாமக்கல் பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் பகுதியில் அமைச்சர் தங்கமணி, திருச்சியில், வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஓட்டளித்த பின் நிருபர்களிடம் கூறுகையில்; மோடி அரசு அகற்றப்பட வேண்டும் என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா சென்னை சாலிகிராமத்தில் ஓட்டளித்தனர்.
ஸ்டாலின் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்: இன்று ஒட்டுமொத்த வாக்காளர்களும் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கிட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். 500, 1000, 2 ஆயிரம் , பத்தாயிரம் வரை ஓட்டுக்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நோட்டுக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் மத்திய , மாநில ஆட்சிக்கு கூட்டாக உள்ளது. பழுதான இயந்திரத்தை விரைவில் சரி செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.


நாம் தேர்தல் திருநாளை கொண்டாட வேண்டும். அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஓட்டளித்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்; நான் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். ரெய்டு என்பது பாரபட்சம் இல்லாமல் தான் நடத்தப்படுகிறது என்றார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் சாலி கிராமத்தில் வாக்களித்தனர்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிருபர்களிடம் பேசுகையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. எங்களின் கூட்டணி அமோக வெற்றி பெறும். ரெய்டு என்பது தகவலின்பேரில் தான் நடக்கிறது என்றார்.

ஓட்டளித்த பின்னர், கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கூறியதாவது:நமக்கு மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகத்தை நாம் தான் தேர்வு செய்கிறோம். நாட்டின் எதிர்காலம், வரும் தலைமுறையினரின் எதிர்காலம் நமது கைகளில்தான் உள்ளது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • bal - chennai,இந்தியா

    கனியை போய் தலைவர் என்று சொல்கிறீர்.... ஜாமினில் உள்ள குற்றவாளி என்று சொல்லவும்...

  • SaiBaba - Chennai,இந்தியா

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஓட்டு போட்டாரா?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    சின்னத்தை கூட யாராவது துண்டு சீட்டில் வரைந்து தர வேண்டும்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    கனிமொழி ராசாவுக்குதானே போட்டார்?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    தயாளு ஓட்டுப்போட வில்லையா?

    • Arunachalam - ,

      அவர் வந்து ஓட்டு போட்டால் வழக்கு பதிவு செய்யப்படும.

Advertisement