Advertisement

ஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்- மோடி; நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்

புதுடில்லி : இன்றைய தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி, காங்., தலைவர் ராகுல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நம்பிக்கை



பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவு, இன்று லோக்சபா தேர்தலின் 2 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் நமது ஜனநாயகத்தை பலப்படுத்த, மக்கள் தங்களின் பலத்தை பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என நம்புகிறேன்.



நியாயம் கிடைக்க



ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, இன்று நீங்கள் அளிக்கும் ஓட்டு, நியாயத்திற்காக ஓட்டளிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நமது வேலையற்ற இளைஞர்கள், போராடும் நமது விவசாயிகள், பணமதிப்பிழப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், ஜாதி அல்லது மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்.






முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு,






Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • முடியட்டும் விடியட்டும் சூரியன் உதிக்கட்டும் - TAMIL NADU,இந்தியா

    இங்கே சிலை ஹிந்து மதம் ஹிந்து மதம் என்று புலம்பல் பிஜேபி வந்து ஐந்து வருடம் தான் ஆகிறது அப்போ அதற்க்கு முன்னர் ஹிந்து மதத்தை யார் காப்பற்றி வந்தது வந்தேறிகள் விளக்கம் உண்டா

  • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Need பிஜேபி ....... Weed காங்கிரஸ். மக்களே சிந்தித்து உங்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காமல் நாட்டு நலம் கருதி தேர்வு செய்யவும்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    "நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்" இந்த மாதிரி சொல்லவே இல்லை "நியாய்" என்று மறைமுகமாக சொன்னது Nyay for our unemployed youth for our struggling farmers for the small traders whose businesses were destroyed by Demonetisation for those who were persecuted because of their e or religion வேலையற்ற ......அதாவது ரூ. 6000 /- மாதம் அந்த திட்டத்தின் பெயர் தான் "நியாய்" அது கிடைக்க வேண்டுமானால் எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். நியாயத்திற்க்காக அல்லவே அல்ல. இது தான் அதன் உண்மையான அர்த்தம்.

  • asok - ,

    ok sir

  • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

    ஒரு அணியினர் தங்களை தாங்களே குற்ற வழக்குகளிலிருந்து விடுவித்துக்கொள்ள எப்பாடுபட்டாவது வெற்றி பெற துடுக்கிறார்கள். மற்றவர் எப்பாடு பட்டாவது நாட்டை முன்னேற்ற முழு முயற்சி செய்கிறார். மக்கள் தங்கள் தலை விதியையே தாங்களே இந்த தேர்தல் மூலம் எழுதிக்கொள்ள போகிறார்கள்.

Advertisement