Advertisement

1,381 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, திருப்பதி தேவஸ்தானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட, 1,381 கிலோ தங்கக் கட்டிகளை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில், செல்லபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று மாலை, 6:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வந்த மூன்று வாகனங்களை மடக்கி, சோதனை செய்தனர். அதில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தனர்.அவர்களிடம் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு, 1,381 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதாக கூறினர்.இரண்டு வாகனங்களை, பறக்கும் படை அதிகாரிகள், திறந்து ஆய்வு செய்தனர். அதில், தங்கக் கட்டிகள் இருந்தன.உரிய ஆவணங்கள் இல்லாததால், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றனர். திருப்பதி தேவஸ்தானம், பஞ்சாப் நேஷனல் வங்கியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தங்கத்தை வைப்பு நிதியில் வைத்திருந்தது.அதன் காலக்கெடு முடிவடைந்ததால், நேற்று சுவிட்சர்லாந்தில் இருந்து, 1,381 கிலோ எடை தங்கக் கட்டிகளை, விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.அங்கிருந்து, தனியார் நிறுவனம் மூலம், ஆந்திராவில் உள்ள வங்கிக்கு எடுத்துச் சென்று, திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்க இருந்தது, விசாரணையில் தெரியவந்தது.ஒரு வாகனத்தில், 30 சிறிய பெட்டிகளிலும், மற்றொரு வாகனத்தில், 26 சிறிய பெட்டிகளிலும், தங்கக் கட்டிகள் இருந்தன.ஒரு பெட்டி தங்கத்தின் எடை, 25 கிலோ. தங்கக் கட்டிகள் பிடிபட்ட தகவல் தெரிந்ததும், திருப்பதி தேவஸ்தானம், அது தங்களுடையது என, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், முறையாக சோதனைக்கு பின், தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement