Advertisement

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, விஷமிகளால் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, சென்னை எம்.ஜி.ஆர்., ரயில் நிலையத்தில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வழக்கத்தை விட, இரண்டு நாட்களாக, கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.தேர்தலில் ஓட்டு போடுவதற்கு, சொந்த ஊர் செல்பவர்கள், அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.கூட்ட நெருக்கடியில், விஷமிகளால் பயணியருக்கு, ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை, டி.எஸ்.பி., பொன்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் சிவநேசன், சகாயராஜ், வெடிகுண்டு நிபுணர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று மாலை முதல் இரவு வரை, பயணியரிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணியர் சோதனைக்கு பின், நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். உடைமைகள், சோதனை கருவிகளால், சோதனை செய்யப்பட்ட பின், நிலையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.ரயில்கள், நடைமேடைகளில் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள், மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. நேற்று மாலையில் இருந்து, இரவு வரை சோதனை தொடர்ந்தது.எழும்பூரில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு நேற்று இயக்கப்பட்ட ரயில்களிலும், பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement