Advertisement

5 மணி நேரம் கொழுந்து விட்டு எரிந்த டயர் குடோன்

மணலி: மணலி, டயர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது.மணலி, கண்ணியம்மன்பேட்டையில், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 40, என்பவரின் இடத்தில், கோபிநாத், 35, என்பவர், பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் குடோன் வைத்துள்ளார்.திறந்தவெளி குடோனில், டயர் தரம் பிரித்து, கத்தரித்து, மறுசுழற்சிக்காக, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மதியம், குடோனை ஒட்டியுள்ள மின் கம்பி உரசியதில், தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில், டயர் குவியல்களில் இருந்து மளமளவென எரிந்த தீயால், கரும்புகை வெளியேறியது. சுவாச கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதியுற்றனர். தகவலறிந்து, நான்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீர் தேவைக்காக, குடிநீர் லாரிகளையும் பயன்படுத்தினர்.மேலும், கடப்பாரை, ஜே.சி.பி., இயந்திரங்களால், டயர் குவியல்களை கிளறி, தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.தீயணைப்பு பணிக்கு உதவிய, பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் சோர்வடையாத வண்ணம், குளிர்பானங்கள், வாழைப்பழம் போன்றவை, கொடுத்து உதவினர்.மருத்துவ உதவிக்காக, கத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ், மருத்துவர், மருத்துவ உதவியாளர்களும், சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தனர்.ஐந்து மணி நேரத்திற்கு பின், தீ கட்டுக்குள் வந்தது. தீ விபத்தில், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர் உள்ளிட்ட பொருட்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கன்டெய்னர் லாரி உள்ளிட்டவை, முற்றிலும் எரிந்து நாசமாயின.மணலி போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement