Advertisement

பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவம்

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், நாளை காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 21ம் தேதி, கருட சேவை நடக்கிறது. 23ம் தேதி, நாச்சியார் கோலத்தில், பல்லக்கு சேவை நடக்கிறது.விழாவின் முக்கிய நாளான, 25ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை, 7:30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 26ம் தேதி, வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில், பல்லக்கு சேவை நடக்கிறது.27ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு, 7:30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 28ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது. 29ம் தேதி முதல் மே., 8ம் தேதி வரை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement