Advertisement

சென்னையில் கூடுதலாக 50 பறக்கும் படைகள் கண்காணிப்பு! பண பட்டுவாடாவை தடுக்க இறுதிக்கட்ட முயற்சி, ஓட்டுப்பதிவு முடியும் வரை பலத்த பாதுகாப்பு

ராயபுரம்: ''பணப் பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக, 50 பறக்கும் படை குழுக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடியும் வரை, இக்குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்,'' என, மாவட்ட தேர்தல் அதிகாரி, பிரகாஷ் கூறினார்.
பெரம்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுப்பதிவு மையங்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி, ராயபுரம், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில், நேற்று மதியம் நடந்தது.இதை, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.'பிரைலி' வசதிமேலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாகனங்கள் மூலம், ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுவதையும் கண்காணித்தனர்.பின், மாவட்ட தேர்தல் அதிகாரி, பிரகாஷ் அளித்த பேட்டி:மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக, மொத்தமுள்ள, 913 ஓட்டுச்சாவடி மையங்களில், 800 மையங்களுக்கு, மூன்று சக்கர நாற்காலிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்காக, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனையில் இருந்து, மூன்று சக்கர நாற்காலிகள் இரவல் வாங்கப்பட்டுள்ளன.மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து, 100 சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில், மண்டல அலுவலர்கள் மூலம், சக்கர நாற்காலிகள் வாங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், மூன்று சக்கர நாற்காலிகள் இருக்கும்.ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விடுப்பட்ட இடங்களிலும், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், வசதிகள் செய்யப்படும்.பார்வையற்ற குறைபாடுடைய மாற்றுத்திறனாளி களுக்கு, ஓட்டு போட, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'பிரைலி' வசதி செய்யப்பட்டுள்ளது.நேரடி பார்வைஅதை தடவி பார்த்து, தாமாகவே ஓட்டளிக்கலாம்; ஓட்டுச்சாவடியில் உள்ள உதவியாளர்களின் உதவியுடனும் ஓட்டளிக்கலாம். ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், இன்று காலை, 5:30க்கு பணிக்கு வர உத்தரவிடப்பட்டுஉள்ளது.சொந்த ஊர் சென்று ஓட்டு போட முடியாதவர்கள், வேறு எந்த முறையிலும் ஓட்டு போட, இதுவரை வசதிகள் செய்யப்படவில்லை.
சென்னை மாவட்டத்தில், மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளாக, 450 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன.அதில், வட சென்னையில், 280 ஓட்டுச்சாவடிகளும், பெரம்பூரில், 130 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. இங்கு, மத்திய பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன், நுண் பார்வையாளர்கள் பணியில் இருப்பர்.ஓட்டுச்சாவடிகள், 24 மணி நேரமும், கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 3,800 ஓட்டுச்சாவடிகளில், 2,000 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை நேரடியாக பார்க்க, வசதி செய்யப்பட்டுள்ளது.கூடுதல் பாதுகாப்புஏற்கனவே, 144 பறக்கும் படை குழுக்கள், பாதுகாப்பு பணியில் உள்ள நிலையில், கூடுதலாக, 50 பறக்கும் படை குழுக்கள், பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வட சென்னை லோக்சபா தொகுதியில் தான், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அதிகம் உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.ஐந்து நிமிடத்தில் போலீஸ் வரும்!
போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டி:பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மேலும், சென்னை முழுவதும், ஓட்டுச்சாவடிகளில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பிரச்னை ஏற்பட்டால், எங்கிருந்து புகார் வந்தாலும், 5 நிமிடத்தில் போலீசார் செல்லும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
இயந்திரங்களை பாதுகாக்க துணை ராணுவம்!ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உட்பட, 150க்கும் மேற்பட்ட பொருட்களை, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிக்காக, 276 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு முடிந்த பின், வடசென்னை லோக்சபா தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ராணிமேரி மகளிர் கல்லுாரியில் வைக்கப்பட உள்ளன.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லயோலா கல்லுாரியிலும், தென்சென்னையில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்திலும் வைக்கப்பட உள்ளன.இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை நாளான, மே, 23ம் தேதி வரை, பாதுகாக்கப்பட உள்ளன.
இந்நிலையில், ஓட்டுப்பதிவு பாதுகாப்பு மையங்களில், இயந்திரங்கள் வைக்கப்பட்ட பின், மே, 22ம் தேதி வரை, அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அந்த வளாகங்களில், மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளன.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள, கல்லுாரி வளாகங்கள் பெரியது என்பதால், வளாகத்தை சுற்றி, சுழற்சி முறையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

Advertisement