Advertisement

ஜனநாயகம் காக்க ஓட்டளிப்பது கட'மை' தேர்தல் திருவிழாவுக்கு அழைப்பு

திருப்பூர்:லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. திருப்பூர் லோக்சபா தொகுதியில், வாக்காளர் சுதந்திரமாக ஓட்டளிக்க, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, இன்று, காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு, பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம், 7,62,935 ஆண்கள்; 7,66,765 பெண்கள்; 136 திருநங்கைகள் என, 15 லட்சத்து, 29 ஆயிரத்து, 836 வாக்காளர் உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது; மாவட்டத்தில், 12 ஆயிரத்து, 350 பேர், தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். திருப்பூர் தொகுதியில், 6,816 பேர் ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபடுகின்றனர்.பதட்டமான சாவடிகள்மாவட்டத்தில், 405 ஓட்டுச்சாவடிகளும், திருப்பூர் தொகுதியில், 325 ஓட்டுச்சாவடிகளும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு கருதி, 'மைக்ரோ அப்சர்வர்'கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூடுதல் கண்காணிப்புக்காக, 'வை-பை' கேமராக்கள், மாவட்டத்தில், 885 சாவடிகளிலும், தொகுதியில், 560 ஓட்டுச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ளன.கூடுதல் பாதுகாப்புதிருப்பூர் தொகுதி தேர்தல் பாதுகாப்புக்காக, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த, 216; மத்திய ரிசர்வ் ஆயதப்படை 70; மாநில ஆயுதப்படையை சேர்ந்த, 140 பேர்; தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த, 315 பேர் என, 741 பாதுகாப்பு படை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுடன், மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.மகளிர் சாவடிகள்ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், இரண்டு முதல் மூன்று மகளிர் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர், பணியாளர்கள், வாக்காளர், வேட்பாளர் ஏஜன்டுகள், போலீசார் என, அனைவரும் பெண்களாக இருப்பார்கள்.'பூத் சிலிப்' கவலை வேண்டாம்!
தேர்தல் கமிஷன் வழங்கிய, 'பூத் சிலிப்' கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்; 'பூத் சிலிப்'பை பயன்படுத்தி ஓட்டளிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது, 11 வகையான போட்டோ அடையாள ஆவணத்தை கொண்டு வந்து, ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போடலாம்.மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிசாமி கூறுகையில், ''லோக்சபா தேர்தல் அறிவித்த நாளில் இருந்து, 100 சதவீத ஓட்டுப்பதிவு நடத்த, விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர் ஒவ்வொருவரும், தவறாமல் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டும்.'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement