Advertisement

மக்கள் கவிஞர் விருது வழங்கும் விழா

சென்னை : சென்னையில் ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம் சார்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 89 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரை துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கு மக்கள் கவிஞர் விருது வழங்கப்பட்டது. மக்கள் கவிஞர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார். பின்னணி பாடகி பி.சுசிலா, பத்திரிக்கை ஆசிரியர் வைத்தியனாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினர். இவ்விழாவில், நடிகையும் முன்னாள் எம்.பி.,யுமான வைஜெயந்தி மாலா, கவிஞர் பிறைசூடன், நடிகை குமாரிசச்சு, நடிகர் ராஜேஷ், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கு பட்டுக்கோட்டை டாக்டர் நியூட்டன் வழங்கிய மக்கள் கவிஞர் விருது வழங்கப்பட்டது. டி.ஆர்.எம்.பிரபா விழாவை ஒருங்கிணைக்க, சவுதாமணி தொகுப்புரை வழங்க, மக்கள் கவிஞர் அறக்கட்டளையின் செயலாளர் பழனிவேலு நன்றியுரை வழங்கினார்.
- தினமலர் வாசகர் தாமோதரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement