Advertisement

'சம்மர் கிளாஸ்' தடையை நீக்க வழக்கு

மதுரை : கோடை விடுமுறையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குழந்தைகள், மாணவர்கள் கோடை விடுமுறையை உறவினர்களுடன் செலவழிக்க வேண்டும். கடும் வெப்பத்தால், கோடைக்கால நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது. எனவே, விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறி நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவிற்கு தடைகோரி, விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 'நீட் தேர்வு, ஐ.ஐ.டி., தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் கோடை விடுமுறையில் தான் நடக்கின்றன. இதனை கணக்கில் கொள்ளாமல் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அதனை ரத்து செய்யவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு 'சம்மர் கிளாஸ் தடை' குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • என் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்

    ennikku indha christianity school vandhatho appove pochu ellaaam..

  • SELF -

    அநியாயமாக உள்ளது தடைக்கு தடை கேட்பது. எதற்கு எதனுடன் சம்பந்தப்படுத்தி தடை கேட்கிறார்கள் என்று புரியவில்லை. நீட் தேர்வு கிளாஸ் என்பது வேறு குழந்தைகளை லீவு நாட்களில் சம்பத் கிளாஸ் என்று கூறி கொடுமைப்படுத்தி காசு சம்பாதிப்பது என்பது வேறு. எனவே எதற்கெடுத்தாலும் கோர்ட்டு இந்த மாதிரியான குழைந்தைகளின் நல்லன் விஷயத்தில் தலையிடக் கூடாது.

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    சும்மேற் கூ எக்ஸ்ட்ரா லீவு கொடுக்கோணும்

Advertisement