Advertisement

'டிக் டாக்' தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி : 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நாட்கள் முன்னர் 'டாக் டாக்' செயலிக்கு தடை விதித்திருந்தது. இதனை பதிவிறக்கம் செய்வதையும் தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்குமாறு சீன நிறுவனமான 'டிக் டாக்' உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


இந்த வழக்கில், 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்ற நீதிபகள் மறுத்துவிட்டனர். நாளை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று மறுத்தனர்.மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 க்கு ஒத்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக, மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக்டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வலியுறுத்தினார்.

இதனை ஏற்று உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி அதை தடை செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மன் சிங்வி ஆஜரானார்.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை டிக் டாக் இன் பதிவிறக்கத்தை மத்தியில் தடை செய்யக் கேட்டிருந்தது. இந்த ஆணை டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி வீடியோ வெளியிடுவது ஒளிபரப்புவதையும் தடை செய்யும் விதத்தில் இருந்தது.


டிக்டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.டிக்டாக் ஆப் 2019 ஆம் ஆண்டு சமூக வலைதள வீடியோ ஆப்பாக தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் இதன் தரவிறக்கம் ஒரு பில்லியனை எட்டியது.
“நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம்… சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக்டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

உயர் நீதிமன்றம் ஏப்ரல் 16க்குள் தடை செய்ய மத்திய அரசினை கேட்டுக் கொண்டது. நீதிமன்றம் டிக்டாக் “ஆபத்தான அம்சம்” மற்றும் “பொருத்தமற்ற உள்ளடக்கத்தை” கொண்டுள்ளதாக கூறியிருந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • K R Gopinath - Coimbatore,இந்தியா

  இந்தியாவின் கலாசாரத்தை சீரழிப்பதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு முறையில் முயற்சி செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த செய்தி. இதைப்போல் சமீபகாலமாக இணையதளத்தில் டிக் டாக் என்ற செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஒரு சீன நாட்டின் படைப்பென்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இதன்மூலம் பல நல்ல விஷயங்களை இந்த டிக் டாக் செயலி மூலம் மாற்றி மிகவும் கொச்சைப்படுத்தி, நம் கலாசாரத்திற்கு எதிராக மிகவும் ஆபாசமாக வெளியிட்டார்கள். இந்த டிக் டாக் என்ற செயலியை தற்போது நமது உயர்நீதிமன்றம் தடை செய்திருப்பது மிகவும் சரியான ஒன்றே. வரவேற்கத்தக்க செயல்.

 • நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா

  கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு, ஸ்டாலின் மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோரின் மதுபான தயாரிப்பு ஆலைகளை மூடிவிட்டால் மதுவிலக்கு சட்டமே தேவையில்லையே......

 • Guna Gkrv - singapore,சிங்கப்பூர்

  சீனாவில் பேஸ் புக் , வாட்டஸ் ஆப் , யு tube கிடையாது அப்படி இருக்க டிக் டாக் எப்படி அடுத்த நாட்டில் வர கேஸ் போடுவாங்க தடை செய்து , face book, whattsapp, you tube எல்லாத்தையும் தடை பண்ணுங்கள் இதனால் தான் நாடு குட்டி சுவராக போய்விட்டது.

  • Ramesh M - COIMBATORE,இந்தியா

   உண்மை. அவர்கள் நாட்டில் 2 G மட்டும்தான் வேலை செய்யும். அணைத்து நெட்ஒர்க் WHATSAPP , FACEBOOK வேலை செய்யது. நாம் சென்று திரும்பிவரும் வரை போன் தவிர வேறு எதுவேம் பயன்படுத்த முடியாதபோது. நம் நாட்டில் மட்டும் அனுமதி கேட்பது நியாயம் இல்லை.

 • ஆப்பு -

  இது போனா...இன்னொண்ணு...

 • ஆப்பு -

  இது போனா...இன்னொண்ணு...சாராயக் கடையை மூட வக்கில்லை....

  • RaajaRaja Cholan - Perungudi

   உனக்கு எங்க வக்கிருக்கோ அங்க போ

Advertisement