Advertisement

பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: பா.ஜ., தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லி லோக்சபா தொகுதியின், பா.ஜ., எம்.பி.,யாக இருப்பவர், மீனாட்சி லேகி. சுப்ரீம் கோர்ட்டில் இவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: 'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை, விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அறிவித்தது. இது பற்றி, கருத்து தெரிவித்த, காங்., தலைவர் ராகுல், 'பிரதமர் மோடி, கொள்ளையடித்திருப்பது உறுதியாகி விட்டது. காவலாளியை திருடன் என, சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது' என்றார்.


சுப்ரீம் கோர்ட், தன் உத்தரவில், எந்த இடத்திலும், பிரதமர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இதன் மூலம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே மாற்ற, ராகுல் முயற்சித்துள்ளார். அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ராகுல் தெரிவித்த கருத்து குறித்து, ஏப்.,22க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு , நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், ரபேல் விவகாரத்தில் ராகுல் தெரிவித்த கருத்துகளைப் போன்ற கருத்துகளை நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்கிறோம் என தான் தெரிவித்தோம் என தலைமை நீதிபதி கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (68)

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

    ஆங்கிலமும் நுட்பமாகத் தெரியாது, ஹிந்தியும் அவ்வளவு புரியாது என்றால் இப்படியுமான சங்கடங்கள் ஏற்படுவது இயற்கையே. எது எதுவாக இருந்தாலும் நேருஜி, இந்திரா அவர்களின் புலமை, ராஜிவ் அவர்களின் மதிநுட்பம் போன்றவற்றுக்கு இணையான நிலைப்பாட்டை அடைய ராகுல் போன்றவர்களுக்கு இன்னும் இருபத்தி ஐந்து (25) வருடங்கள் தேவை. தமிழ்நாடு காங்கிரெஸ்ஸைப் பொறுத்தமட்டில் கராத்தே தியாகராஜன்,அமெரிக்கை போன்றவர்களும் திருந்த வேண்டும்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    இளவல் ராகுலுக்கு எதிராக ஆரியர்கள் திரள்வது சமூக நீதிக்கே எதிரானது .........

  • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

    தெரிந்தோ தெரியாமலோ ராகுல், உச்சநீதி மன்றமே மோடி அவர்களை 'சோவ்கிதர் திருடன்' என்ற சொல்ல, நீதிமன்ற அவமதிப்புக்குள்ளானது, உச்சநீதிமன்றம் 'சொல்லாததை சொன்னதாக' ராகுல் சொன்னதால்.நீதிமன்றம் தான் அவ்வாறு சொல்லவில்லை என்று ஏப்ரல் 15 , 2019 அன்று அறிவித்ததுடன் ராகுல் 23 ஏப்ரல் 2019 குள் தன்னிலை விளக்கும் அளிக்கும் படி கட்டளை இட்டது.மோடியை நீதிமன்றம் ஊழல் செய்தவராக இன்றுவரை அறிவிக்காததால்.. ராகுல் ஜாமீன் வாங்கியது, தன்னை கைது செய்வதை தடுக்கத்தானே.? பலர், மோடியின், தனிப்பட்ட செயலாளராக இருந்ததுபோன்றும், எல்லாம் அறிந்ததுபோலவும் குற்றங்களை மோடிமீது 'தாராளமயமாக' சாட்டுவது, உச்சநீதிமன்றமே தேர்தல் ஆணையத்தை வெறுப்பு பேச்சுகள் எல்லை கடந்த நிலைமைக்கு தடைபோட என்னசெய்தது என கேட்கும் அளவு வளர்ந்ததனால் அன்றோ?

  • Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா

    இந்த புழுகினியை நம்பி எப்படி நாட்டை ஒப்படைப்பது.

  • sridhar - Chennai,இந்தியா

    பப்பு ஒரு பைத்தியம்.

Advertisement