Advertisement

எம்.எம்.ஏ.,க்கள் விடுதியில் சோதனை

சென்னை:லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்னும் மூன்று நாட்களில் நடக்க உள்ளன.இந்நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதிவாரியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் பணம் பிரிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று இரவு, 10:30 மணியில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் அதிரடி சோதனை நடந்தது.'பி பிளாக்'கில் உள்ள, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரின் விடுதியிலும், சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு, பணம் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து, தகவல்களை வெளியிடாமல், தேர்தல் பறக்கும் படையினர் ரகசியம் காத்தனர். நள்ளிரவு வரை சோதனை நடந்ததால் சேப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement