Advertisement

எப்போது!.மாரியம்மன் கோயில் தெப்பத்தில் தண்ணீர் தேக்குவது.... புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம்

மதுரை:மதுரையில் வைகை ஆற்றிலிருந்து மாரியம்மன் கோயில் தெப்பக் குளத்துக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரந்தர மாக தேக்கும் திட்டத்தை செயல் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் தொன்மையான இந்த தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப உற்ஸவம் நடக்கும். ஒரு காலத்தில் சுற்றியுள்ள பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் தெப்பக்குளம் விளங்கியது. தற்போது நீரின்றி வறண்டு சேறும் சகதியும் உள்ளன. இந்த தெப்பக்குளத்திற்கு வைகையாற்றிலிருந்து தண்ணீர் வரும் வகையில் கால்வாய் உள்ளது. காலப்போக்கில் வைகை ஆறு பள்ளமானதால் தண்ணீர் வந்தால் கூட கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு செல்வதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று நிரந்தரமாக தேக்கும் வகையில் புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தீட்டியது. ஆனால் அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. வைகை ஆற்றில் இருந்து மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு செல்லும் கால்வாய் ஏவி மேம்பாலம் அருகே துவங்குகிறது. தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் வைகை ஆற்றில் நீர்மட்டம் உயரும். இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தால் கால்வாய்க்கு செல்லும் வகையில் சிறிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கு 90 லட்சம் ரூபாயில் திட்டம் உள்ளது. பொதுப்பணித் துறையினர் இப்பணிகளை மேற்கொள்வர். தற்போது தேர்தலால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் உள்ளது. தேர்தல் முடிந்ததும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கும் என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Sathish - Coimbatore ,இந்தியா

    இதைப்பற்றி மக்களுக்கு கவலையில்லை. திராவிட கட்சிகளுக்கு ஓட்டுபோடுவதுதான் அவர்களது குறிக்கோள். நீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. திமுக அதிமுக கட்சிகள் தான் தங்களை ஆளவேண்டும்.

  • ஆப்பு -

    அம்மா குடிநீர் வாங்கி ஊத்தலாமே....உலக வங்கி கடன் குடுக்கும். நிதின் கட்காரியும் உதவுவாரு...உங்க கிட்டே இல்லாத பணமா?

  • ஆப்பு -

    அம்மா குடிநீர் வாங்கி ஊத்தலாமே....உலக வங்கி கடன் குடுக்கும். நிதின் கட்காரியும் உதவுவாரு...உங்க கிட்டே இல்லாத பணமா?

  • ஆப்பு -

    அம்மா குடிநீர் வாங்கி ஊத்தலாமே....உலக வங்கி கடன் குடுக்கும். நிதின் கட்காரியும் உதவுவாரு...உங்க கிட்டே இல்லாத பணமா?

  • ஆப்பு -

    அம்மா குடிநீர் வாங்கி ஊத்தலாமே....உலக வங்கி கடன் குடுக்கும். நிதின் கட்காரியும் உதவுவாரு...உங்க கிட்டே இல்லாத பணமா?

Advertisement