Advertisement

'உன் குடும்ப ஓட்டாவது கிடைக்குமா...'

சென்னை:வேட்பு மனு தாக்கலுடன், அமைதியாக இருந்த சுயேச்சைகள், கேலி பேச்சுக்கு ஆளானதால், பிரசாரம் செய்ய துவக்கி உள்ளனர்.


தென் சென்னை தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் உட்பட, 40 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 28 பேர், சுயேச்சைகள். இவர்களில், பெரும்பாலானோர், வேட்பு மனு தாக்கல் செய்ததோடு சரி. முன் அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்களால், பிரசாரத்தை தவிர்த்து வந்தனர்.


இந்நிலையில், தேர்தல் தேதி நெருங்குவதால், கட்சிகள், சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, ஈடுகொடுக்க முடியாவிட்டாலும், பிரசாரமே செய்யாமல் இருந்த சுயேச்சைகள், 'உன் குடும்ப ஓட்டாவது கிடைக்குமா...' என்ற கேலி பேச்சுக்கு ஆளாகினர். இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் ஆதரவுடன், சில சுயேச்சைகள், கவுரவமான ஓட்டுகள் வாங்க, மக்கள்
அதிகம் கூடும் இடங்களில் சென்று, துண்டு பிரசுரம் வழங்கி, தீவிர பிரசாரம் செய்ய துவக்கி
உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement