Advertisement

தேர்தல் விதிமீறி புதிய சாலை?

அம்பத்துார்:அம்பத்தூரில், லோக்சபா தேர்தல் விதிமீறி, மாநகராட்சி மூலம் புதிய தார்ச்சாலை அமைக்கப்படுவதாக புகார் எழுந்தது.


அம்பத்துார் மண்டலம், 82, 83வது வார்டுகளை இணைக்கும், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம் சாலையில், வி.பி.சி., நகர். காந்தி நகர், முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கலெக்டர் நகர் முதல் புத்தகரம் வரை, 3.5 கி.மீ., நீளத்திற்கு, மாநகராட்சி சாலை உள்ளது.


தேர்தல் விதிமீறி, சில தினங்களாக, அங்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடப்பதாக புகார் எழுந்தது. தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் சிக்குவதை தவிர்க்க, இரவில் பணி நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரி களிடம் கேட்டபோது, 'தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, பணியை துவங்கிவிட்டோம். தார், ஜல்லி மற்றும் ஆட்கள் கிடைப்பதில், காலதாமதமானது. அதனால், இப்போது செய்து வருகிறோம்' என, அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement